The gross collection of the movie OG..! Is it so many crores? இந்தியா மட்டும் அல்லாது உலகளவில் ஆங்காங்கே நடிகர் பவன் கல்யாண் அவர்களுக்கு ஏரத்தாளா அவ்வளவு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதிலும் இவரின் அரசியல் வருகைக்கு பிறகு ரசிகர் எண்ணிக்கை குறைந்ததே தவிர, மடிந்து விடவில்லை. இந்நிலையில்,இவரின் அரசியல் வருகைக்கு பிறகு, வெளிவந்துள்ள இந்த படமானது பேன் இந்தியாக படமாக இல்லாமல், தெலுங்கில் மட்டும் வெளிவந்து இவ்வளவு பெரிய வசூல் செய்துள்ளது பிரமிக்கத்தக்கது.
இம்ரான் ஹாஷ்மி அறிமுகம்
அதாவது பவன் கல்யாணின் 'தே கால் ஹிம் ஓஜி' திரைப்படம் சில நாட்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படம் நான்கு நாட்களில் அமோக வசூல் செய்துள்ளது பவன் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ள 'ஓஜி' ஒரு ஆக்ஷன் எனும் இந்த த்ரில்லர் படத்தில், அவருடன் இம்ரான் ஹாஷ்மியும் நடித்துள்ளார்
4 நாட்களில் பிளாக் பஸ்டர் வசூல்
இந்தப் படத்தின் மூலம் இம்ரான் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார். பாக்ஸ் ஆபிஸில் ₹200 கோடி வசூலைத் தாண்டிய பவன் கல்யாணின் முதல் படம் இதுவாகும் என்பதால் இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இது அவரது சினிமா வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படமாக மாறியுள்ளது. சுஜித் இயக்கிய இந்தப் படத்தில் பிரியங்கா மோகன், ஸ்ரேயா ரெட்டி, அர்ஜுன் தாஸ் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் கதை, பத்து வருடங்கள் காணாமல் போன பிறகு, மற்றொரு கேங்ஸ்டரான ஓமி பாவ்வை (இம்ரான்) கொல்ல மும்பை திரும்பும் ஓஜஸ் கம்பீரா (பவன்) என்ற கேங்ஸ்டரைச் சுற்றி வருகிறது.
ஓஜி திரைப்பட வசூல்
'ஓஜி' வசூல் ஓஜி படம் ரிலீஸுக்கு ஒரு நாள் முன்பு பெய்டு பிரீமியர் மூலம் ₹21 கோடி வசூலித்தது. இந்நிலையில், இந்தியாவில் இப்படம் முதல் நாளில் ₹63.75 கோடியும், இரண்டாம் நாளில் ₹18.45 கோடியும், மூன்றாம் நாளில் ₹18.5 கோடியும் வசூலித்தது. நான்காவது நாளான முதல் ஞாயிற்றுக்கிழமையில் ₹18.50 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம், படம் 4 நாட்களில் மொத்தமாக ₹140.20 கோடி வசூலித்துள்ளது.
உலக அளவில் வசூலை குவிக்கிறது
சர்வதேச அளவிலும் 'ஓஜி' சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. தகவல்களின்படி, முதல் நான்கு நாட்களில் வெளிநாடுகளில் ₹90 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம், நான்கு நாட்களில் உலகளவில் ₹230 கோடி வசூல் செய்துள்ளது. அதாவது, வெறும் நான்கு நாட்களில் 'ஓஜி' திரைப்படம், ரஜினியின் வேட்டையன், அஜித்தின் குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களின் லைஃப் டைம் வசூலை நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாபெரும் நட்சத்திரங்களின் திரைப்பட வசூலை முறியடிக்கும் வகையில் பவன் கல்யானிண் திரைப்படம் நெருங்கியுள்ளது, கண்டிப்பாக முறியடித்து விடும் என்று அவரது ரசிகர்கள் டுவிட் மற்றும் டெம்ளேட்ஸ்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, வைரலாக்கி வருகின்றனர்.