லாவா அப்டேட் :
Lava Shark 2 5G Specifications & Price in India : ஒன்பிளஸ் 15-ஆ, ஐக்யூ 15 என ஒட்டுமொத்த இந்திய மொபைல் சந்தையும் அடுத்தடுத்து வரும் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை நோக்கி காத்திருக்கும் நிலையில் இந்திய மொபைல் பிராண்ட் ஆன லாவா (LAVA) சைலன்ட் ஆக ஒரு புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
லாவா ஷார்க் 2
தற்போது லாவா ஷார்க் 2 (LAVA Shark 2) ஸ்மார்ட்போனாகும். இது ஒரு என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் ஆகும். அதாவது அடிப்படையான தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யம் மிகவும் மலிவான ஸ்மார்ட்போன் ஆகும் அல்லது பீச்சர் போனில் இருந்து ஸ்மார்ட்போனிற்கு அப்கிரேட் ஆக விரும்புவோருக்கான ஒரு ஸ்மார்ட்போன் ஆகும்.
ஆப்லைனில் மட்டுமே லாவா
அமேசான் இந்தியா அல்லது பிளிப்கார்ட்டில் அறிமுகமாகும் பெரும்பாலான என்ட்ரி லெவல் போன்களை போலல்லாமல், லாவா ஷார்க் 2 ஆனது ஆஃப்லைன் வழியாக மட்டுமே வாங்க கிடைக்கிறது. அதாவது நீங்கள் இதை வாங்க விரும்பினால், உங்களுக்கு அருகிலுள்ள ரீடெயில் கடைக்கு செல்ல வேண்டும்.
லாவா ஷார்க் 2 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்
லாவா ஷார்க் 2 ஸ்மார்ட்போன் ஆனது ஹார்ட்வேர் விஷயங்களை எளிமையாக வைத்திருக்கிறது. ஒரு நாட்ச் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.75-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இருப்பினும் ஸ்க்ரீன் ரெசல்யூஷன் HD+ ஆகவே உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனை இயக்குவது யுனிசாக் T7250 சிப்செட் ஆகும், இது AnTuTu இல் 375,000 க்கும் அதிகமான மதிப்பெண்களை பெறும் என்று லாவா கூறுகிறது. இது 4GB RAM மற்றும் 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. கூடுதலாக 4GB விர்ச்சுவல் ரேம்-க்கான ஆதரவையும் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
5,000mAh பேட்டரியுடன் அசத்தல் அப்டேட்
சாஃப்ட்வேர் பக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 இன் க்ளீன் வெர்ஷன் கொண்டு இயங்குகிறது. விளம்பரங்கள் மற்றும் ப்ளோட்வேர் (bloatware) இல்லை. கேமராக்களை பொறுத்தவரை லாவா ஷார்க் 2 ஸ்மார்ட்போன் ஆனது 50 எம்பி ரியர் சென்சார் மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது கடைசியாக ஷார்க் 2 ஸ்மார்ட்போன் ஆனது 18W சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.
மொபைல் ஃபோனின் விலை
மேலும் இது IP54 தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பு, பளபளப்பான ரியர் டிசைன் மற்றும் இலவச டோர் ஸ்டெப் சேவை என இந்த பட்ஜெட்டில் பார்க்காத அம்சங்கள் மற்றும் நன்மையையும் வழங்குகிறது.லாவா ஷார்க் 2 ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை மற்றும் ஆபர்: லாவா ஷார்க் 2 இந்தியா முழுவதும் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் அரோரா கோல்ட் மற்றும் எக்லிப்ஸ் கிரே நிறங்களில் வாங்க கிடைக்கிறது. 4GB+ 64GB மாடலின் விலை ரூ.7,500, ஆனால் ரூ.750 உடனடி வங்கி தள்ளுபடியின் கீழ் இதை ரூ.6,750 க்கு வாங்கலாம்.
ஷ லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது ரெஃப்ரெஷ் ரேட்- 90ஹெர்ட்ஸ்
LAVA Shark 2 5G Specifications in Tamil :
ரேஷியோ - 20:9
இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே- 6.75
இன்டர்னல் ஸ்டோரேஜ்- 4ஜிபி ரேம், 64ஜிபி
எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ்- எஸ்டி கார்டு வழியாக 1டிபி
செல்பீ கேமரா- 5 மெகாபிக்சல்
வயர்டு சார்ஜிங் -10W சார்ஜர்
பேட்டரி-5000mAh
இதைத்தொடர்ந்து, பிங்கர் பிரிண்ட் சென்சார், 5ஜி, 4ஜி VoLTE, வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகிய அம்சங்களையும், அளவீட்டில் 168.04×77.8×8.2மிமீ மற்றும் எடையில் 200 கிராமும் உள்ளது.
=========