கப்பலிலேயே தேங்கி இருக்கும் முட்டைகள்
தொடரும் ஈரான் இஸ்ரேல் போரால் உலகமுழுவதும் பதற்றமான சுழலானது ஏற்பட்டுள்ளது ,குறிப்பாக ஏற்றுமதி இறக்குமதியிலும் கடுமையான சந்திப்பை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன.
அந்தவகையில் நாமக்கல்லில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட 3.50 கோடி முட்டைகள் துறைமுகங்களிலும், கப்பலிலும் தேக்கமடைந்துள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதியாகும் முட்டை
நாமக்கல் மண்டலத்தில் உள்ள 1,100 க்கும் மேற்பட்ட முட்டைக் கோழிப் பண்ணைகள் மூலம் தினமும் 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு நாள்தோறும் 70 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
நாமக்கல் பகுதியில் இருந்து மட்டுமே முட்டைகள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
வளைகுடா நாடுகளுக்கு உற்பத்தியாகும் முட்டை
சவூதி அரேபியா, ஈரான், இராக், ஓமன், பஹ்ரைன், மஸ்கட், கத்தாா், குவைத் போன்ற வளைகுடா நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் நாமக்கல்லிலிருந்து அதிகளவில் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
தற்போதைய போா்ச் சூழல் காரணமாக இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதியாவது முற்றிலும் தடைபட்டுள்ளதாகவும், ஏற்றுமதி செய்யப்பட்ட முட்டைகள் துறைமுகங்களிலும், கப்பலிலும் தேக்கமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
இதுகுறித்து நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர்கள் கூறுவது
கடந்த மாதம் 28 ஆம் தேதி நாமக்கல்லில் இருந்து 70 க்கும் மேற்பட்ட குளிரூட்டப்பட்ட கன்டெய்னா்களில் வளைகுடா நாடுகளுக்கு கப்பலில் அனுப்பிய 3.50 கோடி முட்டைகள் நடுக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
துறைமுகங்களிலும் கன்டெய்னா்கள் தேங்கியுள்ளன.இது மிகப்பெரி்ய இழப்பாக எங்களுக்கு நேரக் கூடும் என்று தெரிவித்துள்ளனர்.
முட்டை ஏற்றுமதி முற்றிலுமாக பாதிக்கப்பட்டு இருப்பதால், உற்பத்தியாளர்களும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.
===============