ரிலையன்ஸ் நிறுவனம்
"Jio is India's No. 1 digital platform. 524 million subscribers" Jio Chairman Akash Ambani announced a bold roadmap for India's top digital platform : ரிலையன்ஸ் நிறுவனத்தின் 49-வது பொதுக்குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, ‘RIL AGM 2026’ நிகழ்வில், 44 லட்சம் பங்குதாரர்கள் இடையே உரையாற்றினார்.
ஜியோ சந்தாதாரர்கள் 524 மில்லியன்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி திட்டம் குறித்து அவர் விளக்கமாக எடுத்துரைத்தார். ஜியோவின் சந்தாதாரர் எண்ணிக்கை 524 மில்லியனைக் கடந்துள்ளதாக ஆகாஷ் அம்பானி பெருமிதம் தெரிவித்தார்.
ரிலையன்ஸ் சாதனை
இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ரிலையன்ஸ் உருவெடுத்து உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பு
ஜியோ ஏர்ஃபைபர் (Jio AirFiber) மூலம் தற்போது 13 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் இணைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த 'ஃபிக்ஸட் வயர்லெஸ் பிராட்பேண்ட்' (fixed wireless broadband) சேவை மக்களிடையே வேகமாகப் பிரபலமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
5ஜி சேவையிலும் அசத்தல்
5ஜி சேவையைப் பொறுத்தவரை, ஜியோவின் 5ஜி சந்தாதாரர் எண்ணிக்கை 268 மில்லியனைக் கடந்துள்ளதாக ஆகாஷ் அம்பானி தெரிவித்தார். இதன் மூலம், ஒரே நாட்டைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களிலேயே மிகப்பெரிய 5ஜி பயனர் தளத்தைக் கொண்ட நிறுவனமாக ஜியோ திகழ்கிறது.
புதிதாக 77 மில்லியன் சந்தாதாரர்கள்
கடந்த ஆண்டு மட்டும் 77 மில்லியன் புதிய 5ஜி சந்தாதாரர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் ஆகாஷ் அம்பானி தெரிவித்தார்.
2 லட்சம் பேருக்கு வேலை
ரிலையன்ஸ் நிறுவனத்தின் பசுமை ஆற்றல் திட்டங்கள் மூலம் இந்தியாவில் சுமார் 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ஆனந்த் அம்பானி அறிவித்தார்.
இயற்கை எரிவாயு உற்பத்தி
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய இயற்கை எரிவாயு உற்பத்தி நாளொன்றுக்கு 26 MMCMD ஆக உள்ளது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த இயற்கை எரிவாயு உற்பத்தியில் சுமார் 30% ஆகும்.
கச்சா எண்ணெய் உற்பத்தி
கச்சா எண்ணெய் உற்பத்தி நாளொன்றுக்கு 18,000 பேரல்களாக உள்ளது.
==============