BIG Bank initiative in India this is what committee formed in Union budget 2026 is for increased FDI 20 to 49 Percent in PSB details in Tamil Source : Google
வணிகம்

இந்தியாவில் BIG Bank முயற்சி : பட்ஜெட்டில் அமைத்த குழு இதற்குதான்

BIG Bank in India : இந்திய பொதுத்துறை வங்கிகளில் வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) வரம்பை 20 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்த அரசு பரிசீலித்து வருகிறது.

Baala Murugan

விக்சித் பாரத் ஆக மாறும் இந்தியா

BIG Bank in India : மத்திய நிதியமைச்சகத்தின் நிதி சேவைகள் குறித்து செயலாளர் எம்.நாகராஜு பொதுத்துறை வங்கிகளில் வெளிநாட்டு முதலீட்டு அளவை உயர்த்துவது குறித்த தகவலை வெளியிட்டார்.

2047ல் வளர்ச்சி அடைந்த இந்தியா

இந்த மாற்றம் மூலம் இந்தியாவை 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த நாடாக (விக்சித் பாரத்) மாற்றும் இலக்குக்கு ஏற்ப வங்கிகளை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் 49 சதவிகிதம் லிமிட்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2026இல் "விக்சித் பாரத் வங்கி உயர்மட்டக் குழு" அமைக்கப்படும் என்று அறிவித்தார். இந்தக் குழு தான் பொதுத்துறை வங்கி உரிமை அமைப்பு, பெரிய வங்கிகளை உருவாக்குதல் உள்ளிட்டவற்றை முழுமையாக ஆய்வு செய்யும்.

உதாரணமாக அமெரிக்க வங்கிகளில் வெளிநாட்டு முதலீடுகள் கட்டுப்பாடுகள் என்பது எதுவுமில்லை, ஆனால் முதலீடு செய்ய அரசிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். ஆனால் இந்தியாவில் 49 சதவீதம் என்ற லிமிட் வைக்கப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று தகவல் வெளிவந்துள்ளது.

பெரிய வங்கிகள் மூலம் மாபெரும் திட்டம்

இந்தியாவுக்கு உலக அளவில் போட்டியிடும் வலிமையான வங்கிகள் தேவை என்பது மத்திய அரசின் கருதுகிறது. பெரிய திட்டங்கள், உள்கட்டமைப்பு, கிரீன் எனர்ஜி, மேம்பட்ட உற்பத்தி, தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு நிதி திரட்ட வேண்டியுள்ளது.

இந்த நிலையில் பல சிறிய வங்கிகளை வைத்து சிறிய சிறிய திட்டங்களுக்கு நிதியுதவி செய்வதை தாண்டி பெரிய வங்கிகள் மூலம் மாபெரும் திட்டத்திற்து நிதியை அளிக்க முடியும்.

அரசு 51 சதவீத பங்கை வைத்துக்கொள்ளும்

இந்திய அரசு கடந்த சில ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 27ல் இருந்து 12ஆக குறைக்கப்பட்டது, இந்த எண்ணிக்கை குறைப்பு என்பது வங்கிகள் இணைப்புகள் மூலம் நடந்தது. ஆனால் இணைப்பு மட்டும் போதாது.

போதுமான மூலதனம் மற்றும் உலகளாவிய வர்த்தகத்திற்கு ஈடு கொடுக்கும் அளவுக்கான பெரிய வங்கி அமைப்பு தேவை. இங்குதான் வெளிநாட்டு முதலீடு முக்கிய பங்கு வகிக்கும் என்று அரசு கருதுகிறது.

49 சதவீதம் வெளிநாட்டு முதலீடு

அரசு குறைந்தபட்சம் 51 சதவீத பங்கை தக்க வைத்துக்கொள்ளும். மீதமுள்ள 49 சதவீதம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு திறக்கப்படலாம்.

இந்தியாவில் பிக் ஃபேங் உருவாக்கும் முயற்சி

பொதுத்துறை வங்கிகள் எப்போதும் இல்லாத வகையில் தற்போது வலிமையாக உள்ளதால் வங்கி ஒருங்கிணைப்பை வேகமாகவும், சரியான முறையில் செய்திட வேண்டும் என விரும்புகிறது. இதற்கான முதல் படி தான் பட்ஜெட்டில் குழு அமைத்தது.

வெளிநாட்டு முதலீடு அதிகரித்தால் நீண்டகால மூலதனம் கிடைக்கும். பொதுத்துறை வங்கிகளின் வலிமை அதிகரிக்கும். இது விக்சித் பாரத் இலக்கை அடைவது சாத்தியமாகும்.

இதன் மூலம் இந்தியாவில் BIG Bank உருவாக்கி சீனா, அமெரிக்காவின் வளர்ச்சியுடன் போட்டிப்போட முடியும்.