100 நாட்களுக்கும் மேல் சண்டை
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே பிப்ரவரி 28ம் தேதி தொடங்கிய ச்ண்டை 100 நாட்களை கடந்தும் நீடித்தது. அமெரிக்காவின் கொடூர தாக்குதலால், கோபம் அடைந்த ஈரான், ஹோர்முஸ் நீரைணையை மூடியது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
இந்தியா போன்ற ஒருசில நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் மட்டுமே அந்த வழியாக அனுமதிக்கப்பட்டன. இதனால், உலக அளவில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்தன.
முடிவுக்கு வந்த போர்
பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தைகளும் வெற்றி தராத நிலையில், தீவிர முயற்சிகளுக்கு பிறகு ஒருவழியாக போர் முமுடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் உற்பத்தி
உலகளவில் அதிக அளவு கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளாக சவூதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பக்ரைன், குவைத் ஆகிய நாடுகள் உள்ளன.
இந்த நாடுகளில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெயின் பெரும்பகுதி ஹோர்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது.
உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 20% ஹோர்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்தது.
பீப்பாய் 119 டாலர்கள்
குறிப்பாக மார்ச் 9-ஆம் தேதியன்று, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 119 அமெரிக்க டாலர்கள் என வரலாற்றிலேயே இல்லாத உச்சபட்ச விலையை எட்டியது. அதன் பின்னர் சற்று குறைந்தாலும், தற்போது வரை 90 டாலர்களை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கச்சா எண்ணெய் விலை சரிவு
போர் முடிவுக்கு வருவதாக ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. இதன் உடனடி தாக்கம் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் எதிரொலித்து ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ளது.
ஒரு பீப்பாய் 84 டாலர்கள்
நேற்று ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 87.33 டாலராக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 4.70% வரை சரிந்து 83.59 டாலராக விற்பனையாகிறது.
3 மாதங்களில் இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த விலை என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் உலகளாவிய எரிவாயு, கச்சா எண்ணெய் பற்றாக்குறையும் விரைவில் முடிவடையும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
================