ஜவுளி துறையில் ஆதிக்கம்
US India trade agreement in Tamil : இந்த வரிக்குறிப்பு நடவடிக்கையால் ஜவுளி துறைக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளன . அதன்படி ஜவுளி, தோல் பொருட்கள், கைவினைப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரிகள் 18%ஆக குறைந்துள்ளது .
பூஜ்ஜிய வரி
இந்தியா மீதான அமெரிக்க வரி குறைப்பை ஒட்டி இந்திய மருந்துப் பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் போன்றவற்றுக்கு பூஜ்ஜிய வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது .
முழு பாதுகாப்பு விலக்கு
இந்திய விவசாயிகளின் நலனைக் காக்கவும் , விவசாய மற்றும் பால் பண்ணை பொருட்க்ள மீதான வரிக்கு முழு பாதுகாப்பு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது .
எரிசக்தி இறக்குமதி
இந்திய விமானப் பாகங்களுக்கு விலக்கு அளிக்கவும் அமெரிக்கா ஒப்புதல் அளித்ததோடு மட்டுமல்லாமல் ,
அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் $500 பில்லியன் அளவுக்கு அமெரிக்காவிலிருந்து எரிசக்தி மற்றும் தொழில்நுட்பப் பொருட்களை இறக்குமதி செய்யவும் இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது .
முழு வரி விலக்கு பெரும் பொருட்கள்
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களான தானியங்கள், சிவப்பு சோளம், பாதாம், முந்திரிக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது .
மேலும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள், சோயா பீன் எண்ணெய், மதுபானத்திற்கு வரி விலக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது .
உறுதியளிப்பு
இந்த வரிவிதிப்பு மூலம் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மாட்டோம் என இந்தியா திட்டவட்டமாக உறுதியளித்துள்ளது .
பிரதமர் வரவேற்பு
இந்தியா A மீது விதிக்கப்பட்ட 25% அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டத்தை தொடர்ந்து பிரதமர் மோடி வரவேற்று பெருமிதம் தெரிவித்துள்ளார் .