Elon Musk's Tesla car company has entered India by opening its showroom in Mumbai. ANI
வணிகம்

இந்தியாவில் கால் பதித்த ’டெஸ்லா’ : மும்பையில் ஷோரூம் திறப்பு

Elon Musk Tesla Showroom in India : எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம் மும்பையில் தனது ஷோருமை திறந்து, இந்தியாவில் கால்பதித்து இருக்கிறது.

Kannan

கார் சந்தையில் இந்தியா:

Elon Musk Tesla Showroom in India : உலகின் மூன்றாவது பெரிய வாகன சந்தையாக இந்தியா திகழ்ந்து வருகிறது. நான்கு சக்கர வாகனங்களுக்கான தேவை இந்தியாவில் நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. எனவே, உள்நாட்டு கார் நிறுவனங்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு நிறுவனங்களும் விதவிதமான தயாரிப்புகளை கொண்டு வந்து வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தி வருகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்தியாவில் டெஸ்லா கார்கள் விற்பனை :

இந்தநிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட டெஸ்லா நிறுவனம்,(Tesla Company in India) இந்தியாவில் தனது விற்பனையை தொடங்கி உள்ளது. மும்பையில் இந்த நிறுவனம் தனது முதல் ஷோரூமை(Tesla Mumbai Showroom) திறந்து இருக்கிறது. இந்த விழாவில் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கலந்து கொண்டார்.

இந்திய சந்தையில் டெஸ்லா நிறுவனம் :

தற்போது ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனாவில் கார்கள் விற்பனை கடும் சரிவை கண்ட நிலையில், இந்திய சந்தையில் டெஸ்லா(Tesla Car) நுழைந்துள்ளது. இந்தியாவில் விற்பனை செய்வதற்காக, முதற்கட்டமாக ஷாங்காய் ஆலையில் இருந்து '5 ஒய்' ரக கார்களை டெஸ்லா இறக்குமதி செய்துள்ளது. மும்பை குர்லா பகுதியில், விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

டெஸ்லாவின் மின்சார கார்கள் :

y வகை மின்சார கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மாடல் கார் ரூ.60 லட்சம்(Tesla Car Price) என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், வின்ஃபாஸ்ட் மின்சார காரின் முதல் 2 மாடல்களுக்கான (VF6, VF7) முன்பதிவு தொடங்கி உள்ளது. மின்சார கார்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டும் நிலையில், டெஸ்டா இந்திய சந்தையில் முத்திரை பதிக்கும் எனத் தெரிகிறது.

=====