gas reserve has been discovered in the Andaman Sea region to meet India's natural gas needs. google
வணிகம்

இயற்கை எரிவாயு, இந்தியாவுக்கு புதிய விடியல் : அந்தமான் கடல் பகுதியில் எரிவாயு இருப்பு படுகை : ஆயில் இந்தியா சாதனை...!

இந்தியாவின் இயற்கை எரிவாயு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அந்தமான் கடல் பகுதியில் எரிவாயு இருப்பு படுகை கண்டறியப்பட்டுள்ளது.

Kannan

இந்தியாவின் எரிவாயு தேவை

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுவுக்கான இந்தியா அரபு நாடுகளே மட்டுமே நம்பி இருக்கிறது. இந்தியாவில் கிடைக்கும் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுவை கொண்டு நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது.

ஈரான் போர் - சப்ளை பாதிப்பு

ஈரான் போர் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு இருக்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை சந்திப்பதை தவிர்க்கும் விதமாக, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

எரிபொருள் தட்டுப்பாடு - மக்கள் அவதி

இது சாமான்ய மக்களை வெகுவாக பாதித்து வருகிறது. இந்தச் சூழலில் தான் ஒரு நல்ல செய்தி கிடைத்து இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவுக்கு விடிவுகாலம் பிறக்கும் வழி கிடைத்துள்ளது.

இயற்கை எரிவாயு படுகை

அந்தமான் ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர ஆய்வுப் பணிகளில், இரண்டாவது முறையாகப் இயற்கை எரிவாயு இருப்பு (Natural Gas Discovery) கண்டறியப்பட்டுள்ளது.

இந்த படுகையானது, வரும் காலங்களில் இந்தியாவின் மிக முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி மையமாக உருவெடுத்துள்ளது.

ஆழ்கடலில் இயற்கை எரிவாயு

இதுக்குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் முக்கியத் தரவுகளை பகிர்ந்துள்ளார்.

அந்தமான் தீவுகளின் கிழக்குக் கடற்கரையிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில், 355 மீட்டர் கடல் ஆழத்தில் அமைந்துள்ள 'ஸ்ரீ விஜயபுரம்-3' (Sri Vijayapuram-3) என்ற ஆய்வு கிணற்றில் இந்த இயற்கை எரிவாயு இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஈசீன் (Eocene) பாறை அமைப்பில், 1900 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட உற்பத்தி சோதனைகளின் போது, தொடர்ச்சியான எரிவாயு வெளியேற்றம் (Continuous flaring) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

2 கிணறுகளில் எரிவாயு இருப்பு

'சமுத்திர மந்தன்' திட்டம் மத்திய அரசால் 2025 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, ஆழ்கடல் ஆய்வுத் திட்டத்தின் கீழ் இந்த அதிரடிப் பணிகள் தொடங்கப்பட்டன.

அந்தமான் கடல் பகுதியில் இதுவரை ஆயில் இந்தியா நிறுவனம் தோண்டிய 3 ஆய்வு கிணறுகளில், 2 கிணறுகள் எரிசக்தி இருப்பை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.

85% தேவை பூர்த்தியாகும்

அந்தமான் கடல் படுகையிலும் சுமார் 184 பில்லியன் லிட்டர் (307 முதல் 370 மில்லியன் மெட்ரிக் டன்) எரிசக்தி வளங்கள் இருக்கலாம் என ஆரம்பக்கட்ட நில அதிர்வு (Seismic) தரவுகள் மூலம் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பானது இந்தியாவின் பொருளாதார இறக்குமதிச் சுமையைக் குறைப்பதில் ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமையப் போகிறது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது.

இதனால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம், நாட்டின் பணவீக்கம் அதிகரித்து பெட்ரோல், டீசல் விலையும் எகிறுகிறது.

ஆய்வுகளை தீவிரப்படுத்திய இந்தியா

அந்தமான் கடலில் கண்டறியப்பட்டுள்ள இந்த இயற்கை எரிவாயுவின் தரம், கலவை மற்றும் வணிக ரீதியான சாத்தியக்கூறுகள் குறித்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுத் தீவிர ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இதன்மூலம் தொடர்ச்சியாக இயற்கை எரிவாயு கிடைக்க தொடங்கினால், இந்தியா இறக்குமதியை நம்பி இருக்க வேண்டிய நிலையே இருக்காது.

======================