Today Gold and Silver Price dicreased in Chennai source:google
வணிகம்

திடீரென சரிந்த தங்கம், வெள்ளி விலை : உற்சாகத்தில் நகைப்பிரியர்கள்!

Today Gold and Silver Price decreased in Chennai : தங்கம் சவரனுக்கு ரூ. 2,120 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 1,21,600 என்றும் விற்பனையாகிறது.

S Kavitha

Today Gold and Silver Price decreased in Chennai : கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,120 குறைந்துள்ளது.

சரியத் தொடங்கிய தங்கம் விலை

தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது விலை சற்று சரியத் தொடங்கியுள்ளது.

தங்கம் விலைக்கான நிர்ணயம்:

சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப நாள்தோறும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஐந்து நாட்களாக ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் தாக்குதல் நடந்து வருகிறது.

போர்ச் சூழல் காரணமா?

போர் தொடங்கிய நால்முதலே உலக பொருளாதாரத்தின் சூழலுக்கு ஏற்ப தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு தினங்களாக தங்கம் விலை ஏறுவதற்கு பதிலாக சற்று அதிகரிக்கத் தான் செய்தது.

நேற்றைய தங்கம் விலை

நேற்று தங்கம் கிராமுக்கு 185 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 15,465 என்றும், ஒரு சவரன் தங்கம் ரூ. 1,23,720 என்றும் விற்பனையானது.

இன்றைய தங்கம் விலை

இன்றும் தங்கம் விலை சற்றி குறைந்து நகைப்பிரியர்களை நிம்மதியடைய வைத்துள்ளது.

தங்கம் கிராமுக்கு 265 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 15,200 என்றும், சவரனுக்கு ரூ. 2,120 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 1,21,600 என்றும் விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி விலை

தங்கத்தைப்போலவே, வெள்ளிவிலையும் சற்று குறைந்துள்ளது.

அதன்படி இன்று ரூ.20 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 295 க்கும் கிலோவிற்கு இருபதாயிரம் குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,95,000 திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஏழு நாட்களில் தங்கம் விலை கடந்து வந்த பாதை:

26 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,19,320

27 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,19,200

28 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,21,600 (இன்று)

28 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,24,400 (இன்று இரண்டாவது முறையாக விலை அதிகரிப்பு)

மார்ச் 1- ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,26,200

மார்ச் 2- ஆம் தேதி 1 சவரன் - ரூ. 1,25,280

மார்ச் 3- ஆம் தேதி 1 சவரன் - ரூ. 1,23,720

மார்ச் 4- ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,21,600 (இன்று)