Gold Price Rises by Rs. 800 per Sovereign: Today's Gold and Silver Price Update! source : google
வணிகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

மார்ச் மாதம் 25 ஆம் தேதியில் இருந்து ஏற்ற இறக்கங்களைக் கண்டுவந்த தங்கம் , தற்போது விலை ஏற்றத்திலேயே நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

S Kavitha

Today Gold and Silver Rate Update in Chennai :

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் ரூ.800 அதிகரித்துள்ளது.

மேற்காசிய போர் சூழல்

மேற்காசிய போர் சூழல் காரணமாக கடந்த சில வாரங்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது.

ஏற்ற, இறக்கத்தில் தங்கம் விலை

ஒருநாள் விலை ஏறுவதும் அன்று மாலையே விலை இறங்குவது என தங்கம் மற்றும் வெள்ளி விலை நகைப்பிரியர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் போக்குகாட்டி வருகிறது.

நேற்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

நேற்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.800 அதிகரித்த நிலையில் ஒரு சவரன் ரூ. 1,10,800க்கு விற்பனையானது.

இன்றைய தங்கம் விலை

இந்நிலையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிரடியாக ரூ.800 உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும் சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,1,600க்கும் விற்பனையாகிறது.

அதேபோல் 24 காரட் தங்கம் இன்று ஒரு கிராம் ரூ.15,218 மற்றும் ஒரு பவுன் ரூ.1,21,744-க்கும் விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி விலை

தங்கம் விலை உயர்ந்தாலும் வெள்ளி விலை மாற்றமின்றி நீடிக்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.255க்கும் , ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,55,000க்கும் விற்பனையாகிறது.

மார்ச் மாதம் 25 ஆம் தேதியில் இருந்து ஏற்ற இறக்கங்களைக் கண்டுவந்த தங்கம் , தற்போது விலை ஏற்றத்திலேயே நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏழு நாட்களில் தங்கம் விலை கடந்து வந்த பாதை:

29 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,09,280

30 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,10,160

31 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,09,360

ஏப்ரல் 1ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,12,400

ஏப்ரல் 2ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,10,000

ஏப்ரல் 3ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,10,800

ஏப்ரல் 4 ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,11,600 (இன்று)

=====