1 லட்சத்து 5 ஆயிரத்தை தாண்டி தங்கம்
Today Gold Rate in Chennai : புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து நகை பிரியர்களின் வாயை பிளக்க செய்துள்ளது, முன்கூட்டியே தங்கம் விலை விண்ணை தொட்டுள்ள நிலையில், தற்போதைய விலையால் நடுத்தர மக்கள் தங்கத்தினை நினைத்து கூட பார்க்க முடியாத சூழலில் தள்ளப்பட்டுள்ளனர்.
ஒரு லட்சத்தை தொட்ட தங்கம் விலை
இந்நிலையில், நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,120க்கும், சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் 1,04,960க்கும் விற்பனை செய்யப்பட்டது.தொடர்ந்து இன்றும் தங்கம் விலை உயர்ந்து நகை பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,170க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
2 லட்சத்தை தாண்டிய ஒரு கிலோ வெள்ளி
அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,980க்கும் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.87,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையும் ஒரே நாளில் அதிரடியாக கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.292க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,92,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் உயர்வுக்கான காரணம்
சர்வதேச நிலவரங்கள் மற்றும் பல்வேறு நாட்டின் போர்களால் நாடு முழுவதும் பொருளாதார வீழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதில் கூடுதலாக, அமெரிக்க அதிபரின் வரிவிதிப்பின் பிரதிபலிப்பு இந்தியாவில் தங்ககத்தின் விலையில் பெரும் ஏற்றத்தை ஏற்படுத்தி,பொதுமக்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது, 6 மாதங்கள் முன்னர் 60 ஆயிரத்தில் இருந்த தங்கம் விலை தற்போது 1 லட்சத்தை தாண்டி உச்சம் தொட்டுள்ளது. இதனால், நடுத்தர மக்கள் தங்கத்தினை நினைத்துக்கூட பார்க்கமுடியாத, அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். இதைத்தொடர்ந்து, தங்கம் விலை 1 லட்சத்தை விட குறைவதற்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ள பொருளாதார நிபுணர்கள் தற்போதைய நிலவரப்படி தங்கத்தின் விலை மேலும் உயரும் என்று தெரிவித்துள்ளனர்.