Gold and Silver Prices Drop Sharply Today
மேற்காசிய போரால் சரியும் தங்கம், வெள்ளி விலை
Gold Price Today Decreased in Chennai : கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் கிட்டத்தட்ட ரூ.14,080 அதிரடியாக குறைந்து நகைப் பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய தங்கம் விலை
இன்று ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 670, சவரனுக்கு ரூ. 5360 குறைந்து ஒரு கிராம் ரூ. 12,950க்கும், ஒரு சவரன் ரூ. 1,03,600 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு வாரத்தில் ரூ.14.080 சரிந்த தங்கம்!
கடந்த வாரத் தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ.1,17,600 க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், இன்று ஒரே அடியாக சவரனுக்கு ரூ. 5,360 குறைந்து ரூ.1,03,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிட்டத்தட்ட கடந்த ஒருவாரத்தில் மட்டும் ரூ. 14,080 குறைந்துள்ளது.
மேற்காசிய போர் காரணமா?
ஈரான் இஸ்ரேல் அமெரிக்க போர் பதற்ற சூழல் காரணமாக கச்சா எண்ணெய் மீதான விலை உயர்வு, தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வத்தை குறைத்துள்ளது தான் தங்கம் விலை சரிய காரணம் என்று கூறப்படுகிறது.
1 லட்சத்திற்குள் தங்கம் விலை சரியும்?
தற்போது ரூ. 1,03,600 விற்பனை செய்யப்பட்டு வரும் தங்கம் அடுத்த சில நாட்களில் 1 லட்சத்திற்குள் குறையும் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக நகைப் பிரியர்களும் அதீத மகிழ்ச்சியில் உள்ளனர்.
மேற்காசிய போர் காரணமாக தங்கம் விலை சரியும் நிலையில் தங்கத்தைப்போலவே வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.
இன்றைய வெள்ளி விலை
அதன்படி கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ. 235க்கும் கிலோவிற்கு ரூ 15 ஆயிரம் குறைந்து ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.
கடந்த ஏழு நாட்களில் தங்கம் விலை கடந்து வந்த பாதை:
16 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,17,680
17 -ஆம் தேதி 1 சவரன் - ரூ. 1,17,200
18 -ஆம் தேதி 1 சவரன் - ரூ. 1,16,560
19 -ஆம் தேதி 1 சவரன் - ரூ. 1,11,200
20 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,11,600
21 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,08,960
22 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,08,960
23 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,03,600
===