தங்கம், வெள்ளி விலை சரிவு
Gold And Silver Rate Today in Chennai : தொடர்ந்து ஏறு முகமாகவே இருந்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தீபாவளிக்கு பிறகு குறைந்து வருகின்றன. அந்த வகையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் கணிசமான அளவு விலை குறைந்திருக்கின்றன. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் நேற்று ஒரு கிராம் 11,450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை 7,000 வரை சரிவு
இன்று காலை கிராமுக்கு 150 ரூபாய் விலை குறைந்து 11,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை 90,400 ரூபாய்க்கு விற்பனையானது. தங்கம் அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து கிட்டத்தட்ட 7000 ரூபாய்க்கு மேல் சரிவடைந்து இருக்கிறது . 10 கிராம் தங்கத்தை பொருத்தவரை 1,13,000ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. 24 கேரட் தங்கமும் இன்று விலை குறைந்திருக்கிறது . 18 கேரட் தங்கமும் சவரனுக்கு 1000 ரூபாய் விலை குறைந்து 75,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த 17ஆம் தேதி அன்று 12,200 ரூபாய் என ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. அதாவது ஒரு சவரன் 97, 600 ரூபாய் என்ற நிலையை எட்டியது.
வெள்ளி விலையும் சரிவு
இன்று காலை வெள்ளி ஒரு கிராமுக்கு ஐந்து ரூபாய் விலை குறைந்து 165 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோவுக்கு 5000 ரூபாய் விலை குறைந்து 1, 65,000 ரூபாய் என்ற அளவுக்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 15ஆம் தேதி வெள்ளி ஒரு கிராமுக்கு 207 ரூபாய் என விலை உயர்ந்திருந்த நிலையில் இன்றைய தினம் அது 165 என குறைந்திருக்கிறது . அதாவது ஒரு கிராமுக்கு 42 ரூபாயும் ஒரு கிலோவிற்கு 42 ஆயிரம் ரூபாயும் விலை சரிவை கண்டிருக்கிறது.
மேலும் படிக்க : Gold Rate Today : 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
சவரனுக்கு ரூ.3,000 சரிவு
இந்தநிலையில், ஆபரணத் தங்கம் விலை இன்று மாலை மேலும் ரூ.1,800 குறைந்து ரூ.88,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று ஒரே நாளில் 3 ஆயிரம் ரூபாய் சரிவினை கண்டிருக்கிறது(Gold Price Today in Chennai). சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரன் ரூ.90,000-க்கு கீழ் வந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து ஒரு கிராம் ரூ.11,075க்கு விற்பனை செய்யப்படுகிறது.
=====