Gold prices fall for second consecutive day, gold prices fall by Rs. 2,240 per pound in two days  google
வணிகம்

இரண்டாவது நாளாக தங்கம் விலை சரிவு : இரண்டு நாட்களில் பவுனுக்கு ரூ.2,240 குறைவு!

தங்கத்தின் விலையானது தொடர்ந்து ஏற்ற இரக்கத்தை சந்தித்து வரும் நிலையில் ,இன்று பவுனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது.

Rohini

ஏற்ற இறக்கத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை

கடந்த சில தினங்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று சரிவை சந்தித்த தங்கம் விலை மற்றும் வெள்ளியின் விலை இன்றும் சரிவை சந்தித்துள்ளது.

சரிவை சந்தித்த தங்கம் விலை

இன்றய நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்துள்ளது சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950-க்கும், பவுனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு பவுன் ரூ.1,11,600-க்கும் விற்பனையாகிறது.

இரண்டு நாட்களில்...

இந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,240 என விலை குறைந்துள்ளது. தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த தங்கம் விலை இரண்டு நாட்களில் சரிவை சந்தித்து வருகிறது,

கடந்த தினங்களாக தங்கத்தின் நிலவரம்

தங்கத்தின் விலை

கடந்த தினங்கள் நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது ,23ம்தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.14,160க்கும், பவுனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,280 விற்பனையானது.

அதைப்போல 24ம்தேதி நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,100க்கும் பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,12,800க்கும் விற்பனை செய்யப்பட்டது ,

மேலும் 25ம் தேதி கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.14,200க்கும் பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,13,600க்கும் விற்பனையானது.

இன்றைய நிலவரப்படி

24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.163 என விலை குறைந்து, ஒரு கிராம் ரூ.15,219-க்கும், 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.125 என விலை குறைந்து, ஒரு கிராம் ரூ.11,635-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மற்றம் இல்லை

வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.265-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனையாகிறது.

==============