Today Gold and Silver Rate Update in Chennai : தங்கம் விலை இன்று அதிரடியாக ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,10,800 க்கு விற்பனையாகிறது.
மேற்காசிய போர் சூழல்
மேற்காசிய போர் சூழல் காரணமாக கடந்த சில வாரங்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது.
ஏற்ற, இறக்கத்தில் தங்கம் விலை
ஒருநாள் விலை ஏறுவதும் அன்று மாலையே விலை இறங்குவது என தங்கம் மற்றும் வெள்ளி விலை நகைப்பிரியர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் போக்குகாட்டி வருகிறது.
நேற்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
நேற்றைய தினம் காலை, மாலை என இருவேளையும் சேர்த்து சவரனுக்கு ரூ.2400 குறைந்திருந்த தங்கம் ஒரு சவரன் ரூ. 1,10,000க்கு விற்பனையானது.
நேற்றைய வெள்ளிவிலை நிலவரம்
அதேபோல் வெள்ளி விலையும் கிராமிற்கு ரூ.10 கிலோவிற்கு ரூ.10000 குறைந்து ஒரு கிராம் ரூ. 255க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை
இந்நிலையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று அதிரடியாக ரூ.800 உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,850க்கும் சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,10,800க்கும் விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை
தங்கம் விலை உயர்ந்தாலும் வெள்ளி விலை மாற்றமின்றி நீடிக்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.255க்கும் , ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,55,000க்கும் விற்பனையாகிறது.
கடந்த ஏழு நாட்களில் தங்கம் விலை கடந்து வந்த பாதை:
28 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,09,280
29 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,09,280
30 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,10,160
31 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,09,360
ஏப்ரல் 1ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,12,400
ஏப்ரல் 2ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,10,000
ஏப்ரல் 3ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,10,800(இன்று)
=====