தினமும் வரலாறு காணாத உச்சம்
Gold Rate Today in Chennai : சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி சாமான்ய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், ஆபரண தங்கம் கிராம், 11,860 ரூபாய்க்கும், சவரன், 94,880 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி ஒரு கிராம் 207 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 40 ரூபாய் உயர்ந்து, 11,900 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 320 ரூபாய்க்கு அதிகரித்து, 95,200 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளி கிராமுக்கு, 1 ரூபாய் குறைந்து, 206 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
98,000ஐ நெருங்கும் தங்கம் விலை
இந்தநிலையில், தங்கம் விலை இன்று 97 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. சவரனுக்கு ரூ.2400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.97,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,200க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் ரூபாயை எட்டிப் பிடிக்க 2,400 ரூபாய் மட்டுமே குறைவாக இருக்கிறது.
24 கேரட், 18 கேரட் தங்கம்
ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹13,309 ஆக உள்ளது, 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹10,100 ஆக இருக்கிறது.
பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர்.இதேபோன்று, பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் தங்கத்தில் முதலீட்டை அதிகரித்து வருகிறார்கள். பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கி குவிப்பதால், விலையேற்றத்தை கட்டுப்படுத்த முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
வெள்ளி விலை நிலவரம்
தங்கத்திற்கு போட்டியாக இதுவரை உயர்வை தொட்டு வந்த வெள்ளி விலை சற்று குறைந்து இருக்கிறது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.203க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
============