Gold prices rise to $ USD 5600 – China investors are increasing their investments with Gold here is full details in Tamil Source : Google
வணிகம்

5600 டாலர் வரை உயர்ந்த தங்கம் : முதலீட்டை பெருக்கும் சீனர்கள்!

சீனா கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக உலோக தங்கத்தை அதிகளவில் வாங்கி குவித்தது வரும் நிலையில், அரசு நிறுவனம், முதலீட்டு அமைப்புகள் என பல தரப்பினர் தங்கத்தை உலோகமாக வாங்கி குவித்து வருகின்றனர்.

Baala Murugan

சீனாவின் ஹாங்காங்கில் எகிறும் தங்கம்

China Gold Investment : சீனா தங்கம், வெள்ளி ஏற்றுமதியில் கடுமையான கட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளனர். இதனால் சீனாவில் இருந்து வெளியேறும் உலோகம் குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது சீனா மற்றும் ஹாங்காங் சந்தையில் தங்கம், வெள்ளி அடிப்படையிலான முதலீட்டு திட்டங்கள் அடுத்தடுத்து அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து, சீனாவின் உள்நாட்டு முதலீட்டாளர்கள், தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்து வருகின்றனர்.

இ பண்ட் நிறுவனத்தின் இடிஎஃப் திட்டம்

ஹாங்காங் பங்குச் சந்தையில் வியாழக்கிழமை அறிமுகமான ஹாங் செங் தங்க ETF (Exchange Traded Fund) முதல் நாளிலேயே 9 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தது.

ஸ்பாட் தங்க விலை ஒரு டிராய் அவுன்ஸுக்கு $5,600ஐ நெருங்கிய புதிய உச்சத்தை எட்டியதால் இந்த உயர்வு ஏற்பட்டது. இதோடு புவிசார் பதற்றங்கள், பொருளாதார நிச்சயமின்மை மற்றும் அமெரிக்க டாலர் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகியவை முதலீட்டாளர்களை தங்கத்தை பாதுகாப்பு சொத்தாக தேர்ந்தெடுக்க தூண்டியுள்ளன.

இதனால் தங்கம் சார்ந்த அனைத்து முதலீடுகளும் தற்போது முக்கியதுவம் பெறுவது மட்டும் அல்லாமல் அதிகப்படியான முதலீட்டையும் பெறுகிறது.

ஹாங் செங் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் நிர்வகிக்கும் இந்த ETF, லண்டனை தலைமையிடமாகக் கொண்ட LBMA (London Bullion Market Association) காலை தங்க விலையை நெருக்கமாக பின்பற்றி இயங்குகிறது. இதேபோல் சீனாவில் உள்ள E-Fund தங்க ETF 5 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தது. E-Fund நிறுவனம் வெள்ளிக்கிழமை ஹாங்காங் பங்குச் சந்தையில் Gold Miner Select Index ETFஐ அறிமுகப்படுத்த உள்ளது.

தங்கத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள்

தங்க விலை தொடர் உயர்வால் இத்தகைய நிதி திட்டங்களுக்கு முதலீடு அதிகரித்து இந்த திட்டங்கள் முதன்மை வகித்து வருகிறது. மேலும் இதே E-Fund நிறுவனம் செவ்வாய்கிழமை இரவு தனது E-Fund தங்க Gold Theme Fund-ன் Class A யூனிட்களுக்கு சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் SIP முதலீடுகளை ஜனவரி 28 முதல் நிறுத்துவதாக அறிவித்தது.

தங்கம் தொடர்பான முதலீட்டு திட்டங்களை நிர்வாகம் செய்யும் பல நிதி நிர்வாக நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடம் இருந்து அதிகளவில் முதலீட்டை ஒரு பக்கம் பெற்றாலும், சந்தையில் போதுமான உலோகம் இல்லை, இதனால் தங்கத்தை சந்தை விலையை தாண்டி பிரீமியம் விலையில் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால், இந்த முதலீட்டு போட்டு இழப்பு ஏற்படும் அச்சத்தால் உலகில் பல தங்க முதலீட்டு திட்டங்களை சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் SIP முதலீடுகளை பெறுவதை நிறுத்தப்பட்டு உள்ளது.

தங்கத்தின் பக்கம் திரும்பும் உலக முதலீட்டாளர்கள்

இதில் சீனாவின் E-Fund நிறுவனமும் ஒன்று. தங்க விலை திங்கள்கிழமை 5,000 டாலரை முதல் முறையாக கடந்தது. தற்போகு 5600 டாலர் வரையில் உயர்ந்து இந்த வாரத்தில் மட்டும் சுமார் 10 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. உலகளவில் பாதுகாப்பு தேடும் முதலீட்டாளர்கள், மத்திய வங்கிகளின் தொடர் வாங்குதல் மற்றும் டாலரின் பலவீனம் ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு ஆதரவாக உள்ளன என்பதால், உலக நாடுகளில் முதலீட்டாளர்கள் பலர் தங்கம் நோக்கி திரும்பி அதில் முதலீடு செய்து வருகின்றனர்.