Goods and Services Tax (GST) collections in India hit a record high of Rs 1.83 lakh crore in February google
வணிகம்

GST Collection : ஜிஎஸ்டி வசூலில் புதிய சாதனை! பிப்ரவரியில்1.83 லட்சம் கோடியை தாண்டியது... : அசத்திய பெரிய மாநிலங்கள்

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிப்பு, பிப்ரவரி மாதம்1.83 லட்சம் கோடியை தாண்டி சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது.

Kannan

பிப்ரவரி ஜிஎஸ்டி வசூல் - 1.83 லட்சம் கோடி

Goods and Services Tax (GST) collections in India hit a record high of Rs 1.83 lakh crore in February ; ஈரான் போர் காரணமாக உலக அளவில் பதற்றம் நீடிக்கும் நிலையில், இந்தியப் பொருளாதாரத்திற்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. 2026 பிப்ரவரி மாதம் சரக்கு மற்றும் சேவை வரி ( ஜிஎஸ்டி ) வசூல் ரூ. 1.83 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

8.1 சதவீதம் அதிகம்

அரசு தரப்பு அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இது முந்தைய மாதத்தை விட 8.1 சதவீதம் அதிகமாகும். பிப்ரவரி 28ஆம் தேடி நிலவரப்படி 2025-26 நிதியாண்டில் மொத்த மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 20.27 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு 8.3 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது.

வலுவான வரி வசூல்

பிப்ரவரி மாதத்தில் மொத்த ரீஃபண்ட் ரூ. 22,595 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டை விட 10.2 சதவீதம் அதிகமாகும். ரீஃபண்ட் தொகை அதிகரித்த போதிலும் அரசின் நிகர ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.61 லட்சம் கோடியாக இருந்தது. இது வலுவான வரி வசூலைப் பிரதிபலிக்கிறது.

உள்நாட்டு வருவாய் 1.36 லட்சம் கோடி

உள்நாட்டு வருவாய் ரூ. 1.36 லட்சம் கோடியாக இருந்தது. இது 5.3 சதவீத வளர்ச்சியாகும். இறக்குமதி வருவாய் ரூ. 47,837 கோடியாக இருந்தது. இது 17.2 சதவீத அதிகரிப்புடன் மிகப்பெரிய வளர்ச்சிப் பிரிவாகும். இது வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் இறக்குமதி செயல்பாடு வலுவாக இருப்பதை குறிக்கிறது.

செஸ் வருவாய் குறைந்துள்ளது.

ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூல் வலுவாக இருந்தபோதிலும், நிகர செஸ் வருவாய் ரூ. 5,063 கோடியாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ. 13,481 கோடியாக இருந்தது. செஸ் வசூலில் ஏற்பட்ட சரிவு கொள்கை வகுப்பாளர்களுக்கு பகுப்பாய்வு செய்ய வேண்டி உள்ளது.

முதலிடத்தில் மகாராஷ்டிரா

மாநில வாரியான புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, மகாராஷ்டிரா மாநிலம் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளது. தீர்வுக்கு முந்தைய அடிப்படையில் மகாராஷ்டிரா ரூ. 10,286 கோடியை வசூலித்தது. அதைத் தொடர்ந்து கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்கள் உள்ளன.

தமிழ்நாடு - நேர்மறையான வளர்ச்சி

தீர்வுக்கு பிந்தைய அடிப்படையில், இமாச்சலப் பிரதேசம், சண்டிகர், உத்தரகண்ட், ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

சிறிய மாநிலங்களில் வசூல் சரிவு

ஆனாலும், மேற்கு வங்கம், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், திரிபுரா மற்றும் ஜம்மு-காஷ்மீர் போன்ற மாநிலங்கள் சரிவைக் கண்டன. பெரிய மாநிலங்கள் சிறப்பாகச் செயல்பட்டதையும், சில சிறிய மற்றும் கிழக்கு மாநிலங்கள் அழுத்தத்தை எதிர்கொண்டதையும் தெளிவாகக் எடுத்துக் காட்டுகிறது.

1.96 லட்சம் கோடி - சாதனை நீடிப்பு

முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி என்ற சாதனை அளவே முதலிடத்தில் இருக்கிறது. ஜனவரி மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1,93,384 கோடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.

==============