GST Collection October Month 2025 Has Reached Record high of Rs 1,95,936 Crore Google
வணிகம்

GST : அக்டோபர் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி : 4.6% அதிகரிப்பு

GST Collection October 2025 in India : அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1,95,936 கோடியாக உயர்ந்து சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது.

Kannan

ஜிஎஸ்டி வசூல்

GST Collection October 2025 in India : ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று அதற்கு முந்தைய மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி தொகை குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. செப்டம்பர் மாதம் முதல் ஜிஎஸ்டி வசூல் இரண்டு அடுக்குகளாக மாற்றி அமைக்கப்பட்டது. மோடி அரசு தீபாவளி பரிசாக வழங்கிய இந்த வரி குறைப்பு, மக்களுக்கு நல்ல பலனை அளித்து வருகிறது. இந்தநிலையில், அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு :

அதன்படி, செப்டம்பர் மாதத்தில் ரூ.1.89 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், அக்டோபர் மாதத்தில் 4.6 சதவீதம் அதிகரித்து ரூ.1,95,936 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் வசூலான தொகையை விட இது 9 சதவீதம் அதிகம்.

10 மாதங்களாக வசூலில் சாதனை

தொடர்ச்சியாக கடந்த 10 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.8 லட்சம் கோடியை தாண்டி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டியில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் அமலுக்கு வந்தன. வரி குறைப்பால், மின்னணி, வாகனங்கள் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த சில மாதங்களின் ஜிஎஸ்டி வசூல் விவரம் (GST Collection 2025 Month Wise in India) :

  • செப்டம்பர் - ரூ.1.89 லட்சம் கோடி

  • ஆகஸ்ட் - ரூ.1.86 லட்சம் கோடி

  • ஜூலை - 1.96 லட்சம் கோடி

  • ஜூன் - ரூ.1.84 லட்சம் கோடி

  • மே - ரூ.2.01 லட்சம் கோடி

  • ஏப்ரல் - ரூ.2.36 லட்சம் கோடி

  • மார்ச் - ரூ.1.96 லட்சம் கோடி

  • பிப்ரவரி - ரூ.1.84 லட்சம் கோடி

  • ஜனவரி - ரூ.1.96 லட்சம் கோடி

========