சிஎஸ்ஐஆர்-என்ஐஐஎஸ்டி நிறுவனம் கண்டுபிடித்த டிசைனர் அரிசி
High Protein Designer Rice developed by CSIR-NIIST : மத்திய அரசின் அறிவியல், தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் - தேசிய பல்துறை அறிவியல், தொழில்நுட்ப நிறுவனம் (சிஎஸ்ஐஆர்-என்ஐஐஎஸ்டி) கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் செயல்படுகிறது.
சிஎஸ்ஐஆர்-என்ஐஐஎஸ்டி நிறுவனம் சார்பில் அதிக புரோட்டீன், இரும்புச் சத்து, போலிக்அமிலம், வைட்டமின் பி12 உள்ளிட்ட ஊட்டச் சத்துகள் அடங்கிய ‘டிசைனர் அரிசி' ரகம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதில், சாதாரண அரிசியைவிட 3 மடங்கு அதிக புரதச் சத்து உள்ளது. இதன்மூலம் பொதுமக்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க முடியும். மேலும் டிசைனர் அரிசியில் கிளைசெமிக் இன்டெக்ஸ் (ஜிஐ) அளவு மிக குறைவாக உள்ளது.
நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் அரிசி
அதிக ஜிஐ அளவு உள்ள அரிசி ரகங்களால் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு விரைவாக உயரும். புதிய அரிசியில் ஜிஐ அளவு குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
இதுதொடர்பாக சிஎஸ்ஐஆர்-என்ஐஐஎஸ்டி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “டிசைனர் அரிசி ரகம் தொடர்பான தொழில்நுட்பம், டாடா கன்சியூமர் புராடக்ட்ஸ், திருப்பூரை சேர்ந்த எஸ்எஸ் சோல் புட்ஸ் நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்த ஒப்பந்த பரிமாற்றம் தொடர்பான நிகழ்ச்சி டெல்லியில் பிப். 18-ல் நடைபெறுகிறது” என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்ப்பட்டுள்ளது.
விரைவில் நலம்பெரும் பொதுமக்கள்
இன்றைய நவீன கலாச்சாரத்தில், வாழ்க்கை முறையின் மாற்றத்தால், மனிதர்களின் உடல் நலம் விரைவில், சீர்கெட்டு நோய்வாய்படுகின்றனர்.
இதில் வெறும் 30 சதவிகித மனிதர்களே தங்களின் உடல் நலத்தை கவனத்தில் கொண்டு உணவு மற்றும் உடற்பயிற்சி பழக்கத்தை மேற்கொள்கின்றனர்.
இந்த சூழலில், சிஎஸ்ஐஆர்-என்ஐஐஎஸ்டி நிறுவனம் தரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த டிசைனர் அரிசியானது நடுத்தர மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் அளவிற்கு புழக்கத்தில் வந்தால், இதன் பயன்பாடு அதிகரித்து மக்கள் விரைவில் நலம் பெறுவர்.