டாலரின் தேவை அதிகரிப்பு
Indian Rupee Falls Against US Dollar Value Today Update in Tamil : உலகளாவிய வளர்ச்சியில் இந்தியா முன்னணியில் இருந்தாலும், ரூபாயின் மதிப்பு தொடர்ந்து இறங்கு முகமாகவே உள்ளது. சந்தையில் டாலருக்கான தேவை அதிகமாக இருப்பது, ரூபாயின் எழுச்சியை தடுக்கிறது. இறக்குமதியாளர்களுக்கு டாலர் தேவை அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்டவையும், ரூபாய் மதிப்பு சரிய காரணங்களாக அமைந்துள்ளன.
சரிவை நோக்கி ரூபாய் மதிப்பு
அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றாலும், நவம்பர் மாதத்தில், இந்திய கடன் சந்தையில் 62.30 கோடி டாலரை முதலீடு செய்துள்ளனர். இது, ரூபாய் மதிப்பு மேலும் சரிவதை தடுக்க ஒரு முக்கிய ஆதரவாக இருக்கிறது. நேற்று, அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு 89.94 என்ற இதுவரை இல்லாத சரிவை தொட்டது. வர்த்தக முடிவில் ரூபாயின் மதிப்பு 89.87ஆக இருந்தது.
ரூபாய் மதிப்பு ரூ.90.14
இந்நிலையில் இன்று (டிசம்பர் 03) காலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிந்தது. தற்போது, ரூ.90.14 ஆக உள்ளது. முதல் முறையாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 90-ஐ கடந்துள்ளது.
ஆசியாவில் பலவீனமான நாணயம்
இதன் மூலம் இந்திய ரூபாய் ஆசியாவில் மிகவும் பலவீனமான நாணயங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு 2025ம் ஆண்டில் இதுவரையில் 5 சதவீதம் வரை சரிந்துள்ளது.
இறக்கமதி செலவு அதிகரிக்கும்
ரூபாய் மதிப்பு சரிவும் டாலர் மதிப்பு உயர்வு ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் தரலாம். ஆனால், இறக்குமதியாளர்களுக்கு செலவை அதிகரிக்கும். இது சாமானிய மக்களுக்கு இது பெட்ரோல், டீசல் முதல் பல்வேறு இறக்குமதி பொருட்கள் விலையில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும்.
வர்த்தக பற்றாக்குறை
ஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதி அதிகமாக இருக்கும் காரணத்தால் டாலர் தேவையை அதிகரித்து ரூபாய் மதிப்பை பலவீனப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா-இந்தியா மத்தியிலான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதில் ஏற்படும் தாமதமும் ரூபாய் மதிப்பு சரிவுக்கு முக்கிய காரணமாக உள்ளது
==================