petrol blended with 20 percent ethanol will come April. The central government has issued an order. google
வணிகம்

20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை : ஏப்ரல் முதல் கட்டாயம், மத்திய அரசு ஆணை!

India mandates E20 petrol with minimum RON 95 from April 2026 : நாடு முழுவதும் ஏப்ரல் முதல் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Rohini

மத்திய அரசு ஆணை

India mandates E20 petrol with minimum RON 95 from April 2026 : ஏற்கனவே பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் இ-20 பெட்ரோல் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதை ஏப்ரல் 1 முதல் கட்டாயமாக வழங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் வெளியிடு

இதன் படி மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது ஏற்கனவே பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் இ-20 பெட்ரோல் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதை ஏப்ரல் 1 முதல் கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் அமல் _ மத்திய அமைச்சரகம் உத்தரவு

ஏப்ரல் முதல், நாடு முழுவதும் விற்கப்படும் சாதாரண பெட்ரோல் 20% எத்தனால் கலந்த நிலையிலும் , 95 ஆக்டேன் தரத்துடனும் இருக்க வேண்டும் என உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இருக்கும் சாதாரண பெட்ரோலில் 91 ஆக்டேன் அளவில் உள்ளது எனது குறிப்பிடத்தக்கது.

கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவே இந்த உத்தரவு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனால் ஏற்படும் பயன்

2023 முதல் தயாரிக்கப்படும் பெரும்பாலான வாகனங்கள் 'இ20 எரிபொருளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. எத்தனால் உற்பத்திக்காக கரும்பு மற்றும் சோளம் பயன்படுத்துவதால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.