நீடிக்கும் போர்
தொடர்ந்து நீடித்து வரும் ஈரான் அமெரிக்கா இஸ்ரேல் போரால் உலக நாடுகள் அனைத்தும் பல்லவேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக எரிபொருள் தட்டுப்பாடு , பொருளாதார வீழ்ச்சி என பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன உலக நாடுகள்.
ஐஎம்எஃப் கணிப்பு
நிலவும் இந்த மேற்காசிய போருக்கிடையே,2026 மற்றும் 2027-ம் ஆண்டுகளில் உலகின் மிக வேகமாக வளரும் முக்கியப் பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து நீடிக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் ஐஎம்எஃப் கணித்துள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
ஐஎம்எஃப்-ன் உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2026 மற்றும் 2027-ம் ஆண்டுகளில் தலா 6.5 சதவீதமாக நீடிக்கும் என்றும்.
மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச சந்தைகளும் விநியோகச் சங்கிலியும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதன் விளைவாக, உலகப் பொருளாதார வளர்ச்சி குறித்த முந்தைய மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளது
சில முக்கிய பொருளாதார கணிப்பு
அதனபடி சில பொருளாதார கணிப்புகளை ஐஎம்எஃப்- வெளியிட்டுள்ளது கடந்த ஜனவரி மாதம் 3.3% ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்ட உலகப் பொருளாதார வளர்ச்சி, தற்போது 3.1 சதவீதமாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் நிலவும் எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்கள் விலை உயர்வால், இந்தியாவில் பணவீக்கம் 2026-ல் 4.7 சதவீதமாக உயரக்கூடும். பின்னர் 2027-ல் இது 4 சதவீதமாகக் குறையும். 2025-ம் ஆண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சி மதிப்பீடு 7.6% ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
எதிர்பாராத வீழ்ச்சியை சந்திக்க நேரிடும்
ஈரான் அமெரிக்கா இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தை உடன்பாட்டை எட்டாத நிலையில் , தொடர்ந்து போர் நீடிக்கும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது .
இந்தப் போர் மேலும் தீவிரமடைந்தால், உலகப் பொருளாதார வளர்ச்சி 2026-ல் 2 சதவீதம் வரை வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளது. எரிசக்தி உள்கட்டமைப்புகள் சேதமடைந்தால் பாதிப்பு இன்னும் கடுமையாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
=========