ஈரான் போர்
Rupee in Free Fall, Now Crosses 96 Against Dollar : ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக கச்சா எண்ணெய் சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
ஈரான் போர் 75 நாட்களை கடந்து விட்ட நிலையில், அதனால், ஏற்பட்டுள்ள பாதிப்புகள் உலக நாடுகளை பதம் பார்த்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டதால், வேறு வழியின்றி பெட்ரோல், டீசல் விலைகளை அனைத்து நாடுகளும் உயர்த்தி விட்டன.
கச்சா எண்ணெய் பேரல் 110 டாலர்
இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில வாரங்களாகவே கடுமையான அழுத்தத்தில் உள்ளது.
தற்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 110 அமெரிக்க டாலருக்கு அருகிலேயே நீடிக்கிறது.
85% கச்சா எண்ணெய் இறக்குமதி
இதனால் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிப்பதோடு, நாட்டின் வெளிநாட்டு வர்த்தகத்தின் மீதும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்துக்கு அதிகமானவற்றை இறக்குமதி செய்கிறது.
பலவீனமடைந்த ரூபாய் மதிப்பு
இதனால், உலகளாவிய எண்ணெய் விலை உயர்வானது இந்திய ரூபாயின் மதிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் அமெரிக்க டாலரில் வாங்கப்படுவதால், ரூபாயின் மதிப்பு பலவீனமடையும் போது இறக்குமதிச் செலவு மேலும் அதிகரிக்கிறது.
இது பணவீக்கம், எரிபொருள் கட்டணங்கள் மற்றும் ஒட்டு மொத்தப் பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதன் காரணமாக ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
ரூபாய் மதிப்பு ரூ.96க்கு வீழ்ச்சி
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து 96.14 ஆக குறைந்தது. இது இதுவரை இல்லாத அளவில் ஏற்பட்ட வீழ்ச்சியாகும்.
இது இந்திய பொருளாதாரத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவுகிறது.
இறக்குமதி செலவு அதிகரிக்கும்
ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்து வருவதால், வெளிநாட்டிலிருந்து நாம் வாங்கும் எண்ணெய் முதல் பருப்பு வரை அனைத்திற்கும் கூடுதல் பணம் கொடுக்க வேண்டியிருக்கும்.
இது இந்தியாவிற்கு பெரிய அளவில் பொருளாதார சுமையைத் தரும்.
பணவீக்கம் அதிகரிக்கும்
எரிபொருள் விலை உயர்வதால், போக்குவரத்து செலவுகள் அதிகரித்து ஒட்டுமொத்த பணவீக்கம் (Inflation) உருவாகும்.
ஆசிய நாணயங்கள் வீழ்ச்சி
ஆசிய நாடுகளிலும் பெரும்பாலான நாணயங்கள் அமெரிக்க டாலருக்கு எதிரான மதிப்பில் வீழ்ச்சி தொடர்ந்து சந்தித்து வருகின்றன. இதிலிருந்து மீள்வதற்கான வழிதான் புலப்படவில்லை.
2 ஆண்டுகளில் ரூ.100ஐ எட்டும் மதிப்பு
இதே நிலை நீடித்தால், இந்திய ரூபாயின் மதிப்பு 2027 ஆண்டின் இறுதி அல்லது 2028ம் ஆண்டு ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.100-ஐ தொட்டுவிடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
======