முடிக்கும் வந்த ஈரான் அமெரிக்க போர்
100 நாடகளுக்கும் மேலாக நீடித்து வந்த ஈரான் அமெரிக்க இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தமானது எட்டியிருக்கும் நிலையில் , உலகளவில் எரிபொருள் மற்றும் உணவு பொருட்களிப் விலையானது குறையத்தொடங்கியுள்ளது
திறக்கப்பட்ட ஹோர்மூஸ் நீரினை
ஈரான் அமெரிக்க போரால் , முக்கிய எரிபொருள் வழித்தடமான ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் மூடியிருந்தது ,தற்போது அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கும் நிலையில் ஹோர்மூஸ் வழித்தடத்தை ஈரான் திறப்பதாக உறுதியளித்திருந்த்து
ஐ.நா உணவுப் பொருள் குறியீட்டில் 0.3% குறைந்த விலை
அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலால் தடைபட்ட எரிபொருள் மற்றும் உரம் விநியோகம் தற்போது சீரானதால், உலகளவில் ஜூன் மாதத்தில் ஐ.நா உணவுப் பொருள் குறியீடு 0.3% குறைந்துள்ளது.
இண்ட குறியீடு குறிப்பிடுவது என்ன
ஐ.நா-வின் உணவுப் பொருள் குறியீடு (FFPI) என்பது சர்வதேச சந்தையில் அதிகம் வர்த்தகம் செய்யப்படும் முக்கியமான உணவுப் பொருட்களின் மாதாந்திர விலை மாற்றங்களை அளவிடும் ஒரு உலகளாவிய விலை ஏற்றத்தை குறியீடும் நடைமுறையாகும்
விநியோக சங்கிலி சீராக உள்ளது ,FAO தெரிவிப்பு
ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) மூலம் இது கணக்கிடப்பட்டு ஒவ்வொரு மாதமும் வெளியிடப்பட்டு வருகிறது அந்த வகையில் போர்நிறுத்தம் மற்றும் விநியோக சங்கிலி நிலைமைகள் சீராக உள்ளதன் காரணமாக தானியங்கள் மற்றும் சர்க்கரை விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது
வீழ்ச்சியை சந்தித்த கச்சா எண்ணெய்
அதே போல போர் நிறுத்தம் காரணமாக கச்சா எண்ணெய் விலை 13% அளவுக்கு வீழ்ச்சியடைந்த்து இதற்கு ஒரு முக்கிய கல்லாக பார்கப்படுகிறது , இதன் காரணமாக போக்குவரத்து மற்றும் விவசாய உற்பத்திச் செலவுகளை கணிசமாக குறைத்துள்ளது.
===================