ஜோல்லாவின் புதிய போன்
jolla mobile new update பல வருட அமைதிக்கு பிறகு, ஃபின்னிஷ் பிரண்ட் ஆன ஜோல்லா (Jolla) நிறுவனமானது ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் அடி எடுத்து வைத்து உள்ளது. இந்நிறுவனம் 5ஜி ஆதரவு (5G Support) உடன் கூடிய புதிய ஜோல்லா ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்து உள்ளது.
ப்ரைவஸிக்கு அதிக முன்னுரிமை
இந்த ஸ்மார்ட்போனின் ஹைலைட்டே இதன் ஓஎஸ் தான். இது ப்ரைவஸிக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் - புதிய செயில்ஃபிஷ் ஓஎஸ் (Sailfish OS) உடன் வருகிறது. ஜோல்லா நிறுவனத்தின் கூற்றுப்படி இது ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் ஆகிய இரண்டுமே தற்போது வழங்காத ஒன்றை வழங்குவதை உறுதி செய்யும் என்று தெரிவித்துள்ளது.
3 கலர்களில் அறிமுகம்
புதிய ஜோல்லாபோன் ஆனது மூன்று "நோர்டிக் சீனரியால் ஈர்க்கப்பட்ட" வண்ணங்களில் வருகிறது: பிளாக், ஒயிட் மற்றும் ஒரு அற்புதமான ஆரஞ்சு கலர் ஆப்ஷன். இந்த ஸ்மார்ட்போன் - அனைத்து பக்கங்களிலும் ஒட்டப்பட்ட பெரும்பாலான நவீன போன்களை போலல்லாமல், பழைய பாணிக்கு செல்கிறது: பேக் கவர் வெளியே வரும், மேலும் பேட்டரி முழுமையாக அகற்றக்கூடியதாக உள்ளது.
2 டிபி வரை விரிவாக்கம்
வெளியே மட்டும் தான் பழைய ஸ்டைல் - ஆனால் உள்ளுக்குள் இந்த ஸ்மார்ட்போன் மிகவும் நவீனமாக தெரிகிறது. இது 5ஜி-ஐ ஆதரிக்கிறது, 12ஜிபி வரையிலான ரேம்-ஐ கொண்டுள்ளது. மேலும் மைக்ரோஎஸ்ட கார்டை பயன்படுத்தி 2டிபி வரை விரிவாக்க விருப்பத்துடன் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது.
பெஸ்ட் கனெக்டிவிட்டிக்காக இந்த போனில் டூயல் நானோ-சிம் கார்டுகளும் உள்ள நிலையில், இந்த மொபைலின் ஆர்வம் தொடர்ந்து வருகிறது.
தொடர் அம்சங்கள்
ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில், கொரில்லா கிளாஸால் பாதுகாக்கப்பட்ட 6.36-இன்ச் FHD AMOLED டிஸ்பிளே உள்ளது. ரியர் கேமரா அமைப்பில் 50எம்பி ப்ரைமரி கேமரா உள்ளது.
கூடவே 13எம்பி அல்ட்ராவைடு கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில் செல்பீ கேமரா இருக்கிறது. ஆனால் அதன் மெகாபிக்ஸல் குறித்த விவரங்கள் இதுவரை வெளிவரவில்லை.
கூகுள் ப்ளே சேவை கிடையாது
இந்த ஸ்மார்ட்போனின் ஹார்ட்வேர் எல்லாம் ஒரு விஷயமே இல்லை. இந்த ஸ்மார்ட்போனின் உண்மையான மையம் - அதன் செயில்ஃபிஷ் ஓஎஸ் 5 (Sailfish OS 5) ஆகும்.
இது ஜோல்லா நிறுவனத்தின் லினக்ஸ் (Linux) அடிப்படையிலான மொபைல் பிளாட்பார்மின் லேட்டஸ்ட் வெர்ஷன் ஆகும். ஜொல்லா இதை "வணிக ரீதியாக வெற்றிகரமான ஒரே ஐரோப்பிய மொபைல் இயக்க முறைமை" என்று அழைக்கிறது, மேலும் இது ப்ரைவஸியை பெரிதும் சார்ந்துள்ளது.
செயில்ஃபிஷ் ஓஎஸ்-ல் எந்த டிராக்கர்களும் இல்லை, பேக்கிரவுண்ட் டேட்டா சேகரிப்பும் இல்லை, மேலும் கூகுள் ப்ளே சேவைகளும் இல்லை என்றும் ஜோல்லா நிறுவனம் கூறுகிறது. ஆனாலும் அதிர்ஷ்டவசமாக, செயில்ஃபிஷ் ஓஎஸ் ஆனது ஆண்ட்ராய்டு ஆப்களை ஆதரிக்கிறது.
பிஸிக்கல் பிரைவஸி சுவிட்ச் அறிமுகம்
ஸ்மார்ட்போனின் இடது பக்கத்தில் ஒரு பிஸிக்கல் பிரைவஸி சுவிட்ச் கூட உள்ளது, இது மைக்ரோஃபோன், கேமரா, ப்ளூடூத் மற்றும் பிற சென்சார்களை உடனடியாக முடக்கும் திறனை கொண்டுள்ளது.
சிம்பியான் (Symbian), மீகோ (MeeGo), பயர்பாக்ஸ் ஓஎஸ் (Firefox OS) மற்றும் விண்டோஸ் போன் (Windows Phone) போன்ற தளங்கள் மறைந்துவிட்ட ஒரு மொபைல் உலகில் 12 ஆண்டுகள் உயிர்வாழ்ந்ததன் விளைவாகவே இந்த ஸ்மார்ட்போன் வெளியீடப்படுவதாக ஜோல்லா நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவில் விலை ரூ.10,340?
இன்று, உலகளவில் நான்கு பெரிய மொபைல் இயக்க முறைமைகள் மட்டுமே உள்ளன என்றும், இருப்பினும் செயில்ஃபிஷ் மட்டுமே ஐரோப்பாவிலிருந்து ஒரே பிரதிநிதி என்றும் ஜொல்லா நிறுவனம் கூறுகிறது.
புதிய ஜோல்லா ஸ்மார்ட்போன் ஆனது €99 என்கிற வைப்புத்தொகையுடன் (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.10340 என்கிற வைப்புத்தொகையுடன்) ஐரோப்பாவில் ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கிறது.
இந்திய சந்தையில் எதிர்பார்ப்பு
ஆரம்பகால பையர்கள் €499 தள்ளுபடி செய்யப்பட்ட முழு விலையை செலுத்துவார்கள்; வழக்கமான சில்லறை விலை €599 முதல் €699 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது மற்ற சந்தைகளுக்கு வருமா என்பது குறித்து எந்த விவரங்களும் தெரியாத வகையில், பெரிதும் இதை இந்திய சந்தையில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.