last financial year, UPI recorded a record of over Rs 314 lakh crore in transactions google
வணிகம்

”UPI பரிவர்த்தனை சாதித்த இந்தியா” : 2025-26 நிதி ஆண்டில் 314 லட்சம் கோடி!, 21,800 கோடி பரிவர்த்தனைகள் : வரலாற்று சாதனை!

கடந்த நிதி ஆண்டில் யுபிஐ-யில் 314 லட்சம் கோடிக்கும் அதிகமாக பண பரிவர்த்தனை நடைபெற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.

Kannan

இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை

Financial Year 2025-26, UPI solidified its position as the world's largest real-time payments platform, processing approximately 24,162 crore (241 billion) transactions with a total value exceeding ₹314 lakh crore : இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு யுபிஐ எனப்படும், டிஜிட்டல் பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய பண பரிவர்த்தனை தளமாக உருவெடுத்து, இந்திய பொருளாதாரத்தின் டிஜிட்டல் தூணாக திகழ்ந்து வருகிறது.

314 லட்சம் கோடிக்கு பரிவர்த்தனை

2025-26-ஆம் நிதியாண்டில், இந்தியாவின் யுபிஐ (UPI) பரிவர்த்தனைகள் வரலாறு காணாத வளர்ச்சியை எட்டி சாதித்து இருக்கிறது. 2025-26 நிதியாண்டில், யுபிஐ பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு ₹314 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

21,800 கோடி பரிவர்த்தனைகள்

2025-26 ஆம் நிதியாண்டில் சுமார் 21,800 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 10 ஆண்டுகளில், யுபிஐ பரிவர்த்தனைகள் 12,000 மடங்கு உயர்ந்து, உலகின் மிகப்பெரிய நேரடி பணப்பரிவர்த்தனைத் தளமாக இந்தியா உருவெடுத்துள்ளது.

700 வங்கிகள் - யுபிஐ சேவை

மார்ச் 2026-ல் மட்டும் 2,264 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.700-க்கும் மேற்பட்ட வங்கிகள் யுபிஐ சேவையைப் பயன்படுத்துவதால், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நாட்டில் வெகுவாக அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 40 சதவீத பண பரிவர்த்தனை யுபிஐ மூலமே நடைபெறுகிறது.

யுபிஐ பரிவர்த்தனை - வரலாற்று சாதனை

2026-17ம் ஆண்டில் வெறும் 2 கோடியாக இருந்த பரிவர்த்தனை, தற்போது 24 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக அதிகரித்து இருக்கிறது.

இதேபோல 2016-17ம் நிதி ஆண்டில் ஒரு லட்சம் கோடிக்கும் குறைவாக இருந்த பரிவர்த்தனை மதிப்பு, தற்போது 314 லட்சம் கோடி என்ற அளவில் அதிகரித்து, வரலாற்று சாதனை படைத்துள்ளது.

ஐஎம்எப் பாராட்டு

உலகளவில் மிக விரைவாக பணம் செலுத்தும் வழியாக யுபிஐ இருப்பதாக சர்வதேச நிதியம் தெரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

==================