Central Government plans To Introduce new Hybrid ATM Machine to dispense small currency notes Rs 10, 20, 50 Google
வணிகம்

New ATM : அதிகமாகும் சில்லரை தட்டுப்பாடு - புதிய ஏடிஎம் அறிமுகம்!

பண பரிவர்த்தனைகளில் சில்லரை தட்டுப்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என சில்லரை வியாபரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், புதிய ஏடிஎம் அறிமுகப்படுத்த திட்டமிட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Baala Murugan

ஹைபிரிட் ஏடிஎம் அறிமுகம்

New Hybrid ATM Machine Launch To Dispense Small Currency Notes in India : இந்தியாவில் தினசரி பணப் பரிவர்த்தனைகளில் நீண்ட காலமாகவே சிறிய மதிப்புள்ள நோட்டுகளின் தட்டுப்பாடு பொதுமக்களை சிரமப்படுத்தி வருகிறது. இதற்கு தீர்வாக, மத்திய அரசு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. ரூ.10, ரூ.20, ரூ.50 போன்ற சிறிய நோட்டுகளை நேரடியாக வழங்கும் புதிய வகை ஏடிஎம்கள் மற்றும் “ஹைபிரிட் ஏடிஎம்” என்ற புதிய மாடலையும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சில்லரை தட்டுப்பாடு குறையும்

சில்லறை நோட்டுத் தட்டுப்பாடு இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக, பெரிய மதிப்புள்ள நோட்டுகளை சிறிய நோட்டுகளாகவும் நாணயங்களாகவும் மாற்றிக் கொடுக்கும் ஹைபிரிட் ஏடிஎம் செயல்படும். அதாவது, வழக்கமான ஏடிஎம் மற்றும் காயின் வெண்டிங் மெஷின் ஆகிய இரண்டின் வசதிகளும் ஒரே இயந்திரத்தில் இருக்கும். இதன் மூலம், ரூ.500 போன்ற நோட்டுகளை உடைக்க பொதுமக்கள் வங்கிகள் அல்லது கடைகளுக்கு அலைய வேண்டிய அவசியம் குறையும்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஏடிஎம் நிறுவல்

பெரிய நோட்டை மாற்றும் ஏடிஎம் தற்போது இந்த திட்டம் பைலட் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மும்பையில், சிறிய நோட்டுகளை வழங்கும் புதிய இயந்திரத்தின் மாதிரி சோதனை நிலையில் இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்தது, நாட்டின் பல பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்கள், சந்தைகள், மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த ஏடிஎம்கள் நிறுவப்பட்டுள்ளன.

ஹைபிரிட் ஏடிஎம் அறிமுகத்தால் மாற்றம்

ரூ.500 நோட்டு இந்த முயற்சிக்கான முக்கிய காரணம், சிறிய நோட்டுகளின் பற்றாக்குறையால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அன்றாட சிக்கல்களே. குறிப்பாக, சில்லறை வியாபாரிகள் ரூ.500 நோட்டுகளை மாற்ற முடியாமல், வாடிக்கையாளர்களுடன் விலை பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலை அதிகரித்துள்ளது. இந்த புதிய ஏற்பாடு அந்த சிரமங்களை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்பிஐ தரவுகளின்படி, சுழற்சியில் உள்ள பணத்தில் ரூ.500 நோட்டுகள் எண்ணிக்கையில் 41.2 சதவீதமும், மதிப்பில் 86 சதவீதமும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கு மாறாக, சிறிய நோட்டுகள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும், மதிப்பில் குறைவாகவே உள்ளன. இந்நிலையில், இயந்திரங்கள் தவிர, சிறிய நோட்டுகளை அச்சிடுதல், விநியோகம் மற்றும் மறுசுழற்சி ஆகியவற்றை ஒரே நேரத்தில் அதிகரித்தால்தான் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று பொருளாதார நிபுணர்கள், முதல் சில்லரை வியாபரிகள் வரை கூறி வருகின்றனர்.