Namakkal Egg Wholesale Rate Today Prices Have Reached Unprecedented Historic high of Rs. 6.10 Google
வணிகம்

வரலாற்றில் புதிய உச்சம் : நாமக்கல்லில் முட்டை விலை ரூ.6.10

Namakkal Egg Wholesale Rate Today in Tamil : நாமக்கல்லில் இதுவரை இல்லாத வகையில் முட்டை விலை ரூ.6.10 என்ற வரலாற்று உச்சத்தை தொட்டிருக்கிறது.

Kannan

நாமக்கல் முட்டை

Namakkal Egg Wholesale Rate Today in Tamil : இந்தியாவில் தமிழகத்தில் உள்ள நாமக்கல்லில் தான் அதிக அளவில் முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்கள், வட மாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாள்தோறும் லட்சக் கணக்கான முட்டைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

முட்டை விலை ரூ.6.10 காசுகள்

இந்தநிலையில், நாமக்கல் பகுதியில் முட்டை விலை தற்போது வரலாறு காணாத உயர்வை அடைந்துள்ளது. கடந்த சில நாட்களில் முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து, தற்பொழுது ஒரு முட்டை விலை 6 ரூபாய் 10 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 25 காசுகள் உயர்வு ஏற்பட்டுள்ளது.

55 ஆண்டு வரலாற்றில் முதன்முறை

55 ஆண்டுகளாக நாமக்கல் பகுதியில் முட்டை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 6 ரூபாய் 10 காசுகள்(Namakkal Egg Wholesale Rate Today) என்பது தமிழக கோழிப்பண்ணை வரலாற்றில் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

முட்டை விலை அதிகரிப்பு என்ன காரணம்?

முட்டை விலை புதிய உச்சத்தை எட்டி இருப்பதால், பொதுமக்கள், உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அதிகபட்ச செலவு ஏற்படும். முட்டைக்கான தேவை அதிகரிப்பு, ஏற்றுமதி அதிகரிப்பு, தீவன விலை உயர்வு போன்ற காரணங்களால் இந்த விலை ஏற்றம் என்று கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விலை உயர்விற்கான காரணிகள்(Egg Rate Hike Reasons in Tamil) :

  1. ஏற்றுமதி கணிசமாக அதிகரிப்பு, வடமாநிலங்களுக்கான தேவை அதிகரிப்பு.

  2. பள்ளி சத்துணவு திட்டத்திற்கான முட்டை வழங்குவது அதிகரிப்பு.

  3. கொள்முதல் மற்றும் போக்குவரத்து செலவுகள். தீவன பொருட்களின் விலை அதிகரிப்பு.

மக்களுக்கான செலவு அதிகரிக்கும்

முட்டை விலை உயர்வால் சாதாரண மக்கள் முட்டை வாங்கும் செலவு அதிகரிக்கும். உணவகங்கள் மற்றும் பள்ளிகளுக்கான சத்துணவு திட்டத்திலும் கூடுதலாக செலவு செய்ய வேண்டியிருக்கும். முட்டை பண்ணைகளை மேலாண்மை மற்றும் உற்பத்தி செலவுகளை மீட்டெடுக்க இந்த விலை உயர்வு அவசியமாக உள்ளது.

சில்லரை விலையும் அதிகரிப்பு

கொள்முதல் விலை 6 ரூபாய் 10 காசுகளாக இருக்கும் நிலையில், சில்லரை விலையில் ஒரு முட்டை 8 ரூபாயாக அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது(Namakkal Egg Wholesale Rate Today Predictions). முட்டை அடிப்படையிலான உணவுகள், குறிப்பாக ஆம்லேட் போன்றவற்றின் விலையும் கணிசமாக அதிகரிக்கும்.

ஆட்டு இறைச்சியை வாங்க முடியாதவர்களுக்கு முட்டை பிரியாணிதான் கை கொடுக்கிறது. எப்போதும் நடுத்தர மக்களுக்கு சகாய விலையில் கிடைப்பது கோழி முட்டைகள் தான்.

=====================