வரி குறைப்பால் உச்சம் தொட்ட கார் விற்பனை
India Car Sales December 2025 Report : கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜி.எஸ்.டி., 2.O அறிவிக்கப்பட்டு, வரி விகிதங்கள் குறைக்கப்பட்டதால் அதிகரித்த வாகன விற்பனை, ஆண்டு இறுதி வரை நீடித்துள்ளது.
உள்நாட்டு வாகன நிறுவனங்களான மாருதி சுசூகி, மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் ஆகியவற்றின், பயணியர் வாகன ஆண்டு விற்பனை வரலாறு காணாத உயர்வு கண்டது.
குறிப்பாக, எஸ்.யு.வி., விற்பனை, மொத்த பயணியர் வாகன விற்பனையில் 56 சதவீத இடம்பிடித்தது.
இந்திய கார் நிறுவனங்களின் கடந்த ஆண்டு விற்பனை
அதாவது, முந்தைய ஆண்டில் இது 54 சதவீதமாக இருந்தது. கடந்த 2025ல் 18.44 லட்சம் பயணியர் வாகன விற்பனையுடன் மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் முதலிடம் பிடித்தது. முந்தைய ஆண்டில் இந்நிறுவனம் 17.90 லட்சம் வாகனங்களை விற்றிருந்தது.
மஹிந்திரா நிறுவனம் கார் விற்பனை
கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் மஹிந்திரா நிறுவனம் 41 ஆயிரத்து 424 கார்களை விற்பனை செய்து இருந்தது. 2025ம் ஆண்டு டிசம்பரில், 23 சதவீதம் அதிகரித்து, இந்த நிறுவனம் 50 ஆயிரத்து 946 கார்களை விற்பனை செய்துள்ளன.
டாடா மோட்டார்ஸ் கார் விற்பனை
கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 44 ஆயிரத்து 230 கார்களை விற்பனை செய்து இருந்தது. 2025ம் ஆண்டு டிசம்பரில்,13 சதவீதம் அதிகரித்து, இந்த நிறுவனம் 50 ஆயிரத்து 46 கார்களை விற்பனை செய்துள்ளன.
ஹூண்டாய் கார் விற்பனை
கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் 42 ஆயிரத்து 208 கார்களை விற்பனை செய்து இருந்தது. 2025ம் ஆண்டு டிசம்பரில்,0.5 சதவீதம் அதிகரித்து, இந்த நிறுவனம் 42 ஆயிரத்து 416 கார்களை விற்பனை செய்துள்ளன.
டொயாட்டா கார் விற்பனை
கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் 24 ஆயிரத்து 887 கார்களை விற்பனை செய்து இருந்தது. 2025ம் ஆண்டு டிசம்பரில், 37.2 சதவீதம் அதிகரித்து, இந்த நிறுவனம் 34 ஆயிரத்து 157 கார்களை விற்பனை செய்துள்ளன.
2025 ஆம் ஆண்டு கியா விற்பனை
கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் கியா இந்தியா நிறுவனம் 8 ஆயிரத்து 957 கார்களை விற்பனை செய்து இருந்தது. 2025ம் ஆண்டு டிசம்பரில், 108.0 சதவீதம் அதிகரித்து, இந்த நிறுவனம் 18 ஆயிரத்து 659 கார்களை விற்பனை செய்துள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு டிசம்பரில் மாருதி நிறுவனம் 1.30 லட்சம் கார்களை விற்பனை செய்திருந்தது. இந்நிறுவனம் 2025 டிசம்பரில் 1.78 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இது 37 சதவீதம் உயர்வாகும்.
வரிகுறைப்பால் உயர்ந்த கார், பைக் விற்பனை
ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட பிறகு, சிறிய கார்களுக்கான தேவையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருசக்கர வாகனத்தை பொறுத்தவரை ராயல் என் பீல்டு நிறுவனம் டிசம்பரில் 93,177 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இது வழக்கத்தை விட 37 சதவீதம் அதிகம்.
இது குறித்து விற்பனையாளர்கள் கூறியதாவது: ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் 2025 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ஏற்பட்ட பண்டிகை கால விற்பனைகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதுதான் கார்கள் விற்பனை வழக்கத்தை விட உச்சம் தொட்டதுக்கு முக்கிய காரணமாகும் என்று இந்திய கார், இருசக்கர வாகன நிறுவனங்களின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.