ஜிஎஸ்டி வரி விகிதம்
Cigarette Rate Today After Budget 2026 : ஜிஎஸ்டி வரி விகிதங்களை நான்கு அடுக்கில் இருந்து 2 அடுக்குகளாக மாற்றிய அமைத்த மத்திய அரசு, சிகரெட், புகையிலை மீதான வரி கணிசமாக அதிகரிக்கப்படும் என்று அறிவித்தது.
சிகரெட் மீதான வரி அதிகரிப்பு
ஜனவரி வரை புகையிலை பொருள்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வரி விதிக்கப்பட்டது. இப்போது அது மாற்றி அமைக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய கூடுதல் காலால் வரி மற்றும் சுகாதார வரி விகிதம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய வரி விகிதம் அமல்
புதிய வரி விகிதங்கள் பிப்ரவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இதன் காரணமாக சிகரெட்டின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன.
ஒரு பாக்கெட் சிகரெட் விலை 20 முதல் 30 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இது சிகரெட் பயன்படுத்துவோர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிகரெட் விலையில் மாற்றம்
* சிகரெட்டின் நீளம் மற்றும் பிராண்டை பொறுத்து விலை உயர்வு மாறுபடுகிறது.
* ஃபில்டர் இல்லாத சிகரெட்டுகள் ஒவ்வொன்றும் ரூ.2.50 வரை உயர்கின்றன.
* ஃபில்டர் சிகரெட்டுகள் ரூ.2.10 வரை உயர்கின்றன.
* 70 மி.மீ சிகரெட்டுகள் ரூ.3.60 முதல் ரூ.4 வரை உயர்கின்றன.
* 75 மி.மீ வரையிலான சிகரெட்டுகள் ரூ.5.40 வரை உயர்கின்றன.
* பிரீமியம் ரக சிகரெட்டுகள் ஒவ்வொன்றும் அதிகபட்சமாக ரூ.8.50 வரை விலை உயர்கின்றன.
விலை உயர்வு - மக்கள் வரவேற்பு
சிகரெட் பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று தொடர் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை குறையவில்லை.
இந்நிலையில் மத்திய அரசு கொண்டுள்ள இந்த விலை உயர்வுக்கு பொதுமக்கள் வரவேற்பை அளித்துள்ளனர்.
புகை பிடிப்போர் எண்ணிக்கை குறையும்
அதிக விலையின் காரணமாக சிலர் புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிடவும் வாய்ப்பு உள்ளது. பயன்படுத்தும் எண்ணிக்கையும் கணிசமாக குறையும்.
கடைக்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இந்த விலை உயர்வு இழப்பை ஏற்படுத்தும் என்றாலும், போலி சிகரெட்டுகள், வெளியாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் சிகரெட்டுகள் விற்பனை அதிகரித்து விடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
=====