Nokia Upcoming Phones 2025 HMD Terra M Introduced Nokia Rugged Phone Check Features And Specifications Release Date in Tamil Google
வணிகம்

Nokia : நோக்கியாவின் புதிய ரக்டு போன் - வெளியான அசத்தல் அப்டேட்!

நோக்கியா மொபைல் போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் உரிமம் பெற்று ,எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது எச்எம்டி டெர்ரா எம் (HMD Terra M) என்கிற புதிய ரக்டு மொபைல் போனை அறிமுகம் செய்து உள்ளது.

Baala Murugan

நோக்கியாவின் ரக்டு அப்டேட்

Nokia Upcoming Rugged Phones 2025 : எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் தரப்பில் எச்எம்டி டெர்ரா எம் மாடல் ஆனது - அரசு நிறுவனங்கள், பாதுகாப்பு படைகள், முன்னணி ஊழியர்கள் மற்றும் நிறுவன குழுக்களுக்காக வடிவமைக்கப்பட்ட அல்ட்ரா ரக்டு ஸ்மார்ட் ஃபீச்சர் போன் (Ultra rugged smart feature phone) ஆகும்.

HMD Terra M அறிமுகம்

மேலும் இந்த போன் எச்எம்டி செக்யூர் பிரிவின் (HMD Secure division) ஒரு பகுதியாகும். இந்த பிரிவு பாதுகாப்பான மற்றும் மீள்தன்மை கொண்ட இயக்க தீர்வுகளில் கவனம் செலுத்துகிறது. இந்த பிரிவின் கீழ் முன்னதாக அறிமுகமான எச்எம்டி இவாலோ எக்ஸ்இ (HMD Ivalo XE) மாடலை தொடர்ந்து இந்த எச்எம்டி டெர்ரா எம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எச்எம்டி டெர்ரா எம் மொபைல் போனின் அம்சங்கள்

எச்எம்டி டெர்ரா எம் ஆனது MIL-STD-810H சான்றிதழ் மற்றும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68+IP69K ரேட்டிங்களுடன் இராணுவ தர நீடித்துழைப்பை கொண்டுள்ளது. இது 1.8 மீட்டர் வரையிலான வீழ்ச்சிகளை தாங்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் இது 2.8-இன்ச் கிளைவ் பிரெண்ட்லி டச் ஸ்க்ரீன், புரோகிராம் செய்யக்கூடிய புஷ்-டு-டாக் மற்றும் எமர்ஜென்சி கீகள் மற்றும் சத்தமாக வேலை செய்யும் இடங்களுக்கு உயர்-வெளியீட்டு சவுண்ட் ஸ்பீக்கர் உடன் வருகிறது. மேலும் இது 4ஜி, வோல்ட்இ, வோவைஃபை (VoWi-Fi), ஹாட்ஸ்பாட் மோட், என்எப்சி, டூயல் சிம் மற்றும் இசிம் ஆகிய ஆதர்வுகளையும் கொண்டுள்ளது.

மொபைல் டிவைஸ் மேனேஜ்மென்ட் ஆதரவு

இந்த போன் குவால்காம் (Qualcomm) நிறுவனத்தின் டிராகன்விங் க்யூசிஎம்2290 (Dragonwing QCM2290) சிப்செட் கொண்டு இயங்குகிறது மற்றும் இது கஸ்டம் என்டர்பிரைஸ் ரெடி ஓஎஸ் (custom enterprise-ready operating system) கொண்டு இயக்குகிறது. இது பாதுகாப்பான ஃப்ளீட் டிப்ளாய்மென்ட்க்கான மொபைல் டிவைஸ் மேனேஜ்மென்ட்டையும் (MDM) ஆதரிக்கிறது.

10 நாட்கள் பேக்கப் டைம்

மேலும் இந்த போன் வாடிக்கையாளர் தேவைகளைப் பொறுத்து Zello, Threema, OsmAnd, Lyfo மற்றும் SOTI MobiControl போன்ற ப்ரீ லோடட் ஆப்களுடன் இணைந்து வருகிறது. எச்எம்டி நிறுவனம் இந்த மொபைல் போனுக்கு 5 ஆண்டு காலாண்டு செக்யூரிட்டி அப்டேட்களை உறுதி செய்துள்ளது. 2510mAh பேட்டரி உடன் வரும் இந்த போன் 10 நாட்கள் வரை பேக்கப் டைமை வழங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விலை நிர்ணயம் செய்யவில்லை

எச்எம்டி டெர்ரா எம் விலை(Nokia HMD Terra M Price in India), விற்பனை: கடுமையான சூழல்களுக்காக உருவாக்கப்பட்ட டெர்ரா எம் மாடல் ஆனது 2026 முதல் காலாண்டில், எச்எம்டி செக்யூர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டாளர்கள் மூலம் வாங்க கிடைக்கும் என்று ஒரு செய்திக்குறிப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் விலை நிர்ணயம் மற்றும்சரியான விற்பனை தேதி குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இதுகுறித்த கூடுதல் விவரங்கள் எதிர்காலத்தில் உறுதிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் விலைமாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

புதிய ஃபியேச்சர்ஸ் அப்டேட்

எச்எம்டி நிறுவனம் - இந்த போனுடன் மிஷன் - ரெடி ஆக்சஸெரீகளை வழங்குவதாகவும், இதில் ஒரு பவர் கேபிளை பயன்படுத்தி 10 டிவைஸ்களை சார்ஜ் செய்யக்கூடிய ஸ்டேக்கபிள் சார்ஜிங் டாக் மற்றும் ஒரு ரக்டு பெல்ட் கிளிப் ஹோல்ஸ்டர் ஆகியவைகள் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த ஆக்சஸெரீகள் ஷிப்ட் அடிப்படையிலான வேலை மற்றும் துறையில் விரைவான பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை கிடைத்துள்ள இந்த அப்டேட்டுகளை தொடர்ந்து கூடுதலான தகவல்கள் வரும் காலத்தில் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.