OnePlus 15 vs iQOO 15 Launch Date in India Official Announcement iQOO 15 Specifications Features Price Indian Rupees Read in Tamil iQOO 15 Mobile Phone - Nipun Marya X Page
வணிகம்

OnePlus 15 வில்லனாக iQOO 15- இனி இந்த ஃபோன் வாங்குங்க!

iQOO 15 Launch Date in India Official Announcement : ஒன்பிளஸ் 15 எதிராக ஐக்யூ-15 மொபைல் போனின் இந்திய அறிமுக தேதி குறித்த அப்டேட் வெளிவந்துள்ளது.

Bala Murugan

iQOO 15 Launch Date in India Official Announcement : ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போன் அக்டோபர் 27 ஆம் தேதி மாலை சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் வில்லன் ஆக கடந்த வாரம் சீனாவில் அறிமுகமான ஐக்யூ 15 (iQOO 15) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுக தேதி குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

நிபுன் மரியா எக்ஸ் பதிவு

எக்ஸ் தளம் வழியாக, ஐக்யூ தலைமை நிர்வாக அதிகாரி ஆன நிபுன் மரியா, இந்தியாவில் ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை யூகிக்குமாறு பயனர்களை கேட்டுக்கொண்டார். அவர் பகிர்ந்துள்ள ஒரு ஷார்ட் வீடியோவில், தொடர்ச்சியாக சுழலும் ஒரு ஸ்பின்வீலையும் (SpinWheel) பார்க்க முடிகிறது. அதில் 11 என்கிற எண் (அதாவது 11வது மாதம்) மாறாமல் அப்படியே உள்ளது, ஆனால் மீதமுள்ள எண் (தேதி) தொடர்ச்சியாக சுழலுகின்றன. ஆனாலும் இறுதியில் அது 27 என்கிற எண்ணில் வந்து நிற்பதை வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது. ஆக ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் நவம்பர் 27 ஆம் தேதி நடக்கலாம் என்பது "கிட்டத்தட்ட" உறுதி செய்யப்பட்டுள்ளது.

நிபுன் மரியாவின் தொடர்

நிபுன் மரியாவின் பதிவில் பதிவில்ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஆன ஒரிஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) அப்பேட்டின் புதிய டிசைன் லேங்குவேஜையும் டீஸ் செய்துள்ளார். இதுதான் ஐக்யூ 15 மாடலுக்கு சக்தி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரிஜின்ஓஎஸ் 6 ஆனது ஹோம் பேஜ், லாக் ஸ்க்ரீன் மற்றும் ஆப்களுக்கான மறுவடிவமைப்பு செய்யப்பட்டயூசர் இன்டர்பேஸ் ஆன டைனமிக் க்ளோவை கொண்டுள்ளது. சீனாவில் ஏற்கனவே கிடைக்கும் இந்த யுஐ ஆனது ஆப்பிளின் புதிய லிக்விட் கிளாஸ் வடிவமைப்பை ஒத்திருக்கிறது. கர்வ்டு எட்ஜ்களுடன் வட்ட வடிவ ஆப் ஐகான்கள் மற்றும் விட்ஜெட்டுகளையும் காண முடிகிறது

புதிய அம்சம்

மேலும் ஒரிஜின்ஓஎஸ் 6 ஓஎஸ் ஆனது ரியல்டைம் பிளர் அப்கிரேட், ப்ராக்ரஸிவ் பிளர் மற்றும் ஸ்டாக்டு நோட்டிபிகேஷன்ஸ் ஆகியவைகளையும் கொண்டிருக்கும். மேலும் ஆப்பிளின் டைனமிக் ஐலேண்ட்-ஆல் ஈர்க்கப்பட்ட புதிய ஆட்டாமிக் ஐலேண்ட் ஆனது நிகழ்நேரத்தில் அலெர்ட்களைகளை வழங்கும் ஒரு புதிய அம்சமாகவும் சேர்க்கப்பட்டுள்ளது என்று தெரியவருகிறது.

ஐக்யூ மொபைல் ஃபோனின் 15 முக்கிய அம்சங்கள்(iQOO 15 Specifications % Features) :

  • 6.85-இன்ச் சாம்சங் எம்14 அமோஎல்இடி டிஸ்பிளே

  • 2கே ரெசல்யூஷன்

  • 130Hz ஸ்க்ரீன் சாம்ப்ளிங் ரேட்

  • 144Hz வரை ரெஃப்ரெஷ் ரேட்

  • 1.07 பில்லியன் கலர்ஸ்

  • 508பிபிஐ பிக்சல் டென்சிட்டி

  • கேமிங் மோட்-இல் 300Hz வரை டச் சாம்ப்ளிங் ரேட்

  • பி3 கலர் கேமட்

  • 94.37 சதவீத ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோ

  • 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்

  • அட்ரினோ 840 ஜிபியு

  • இந்த சிப்செட் இரண்டு 4.6GHz செயல்திறன் கோர்களையும் ஆறு 3.62GHz ஆறு செயல்திறன் கோர்களையும் கொண்டுள்ளது.

  • இது ஒரு தனியுரிம க்யூ3 கேமிங் சிப்பையும் கொண்டுள்ளது - 16GB வரை LPDDR5X அல்ட்ரா ரேம் மற்றும் 1TB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்

  • 50 மெகாபிக்சல் (f/1.88) ப்ரைமரி சென்சார்

  • 50-மெகாபிக்சல் (f/2.65) பெரிஸ்கோப் சென்சார்

  • 100x டிஜிட்டல் ஜூம் வரை வழங்கும் 50-மெகாபிக்சல் (f/2.05) வைட்-ஆங்கிள் லென்ஸ்

  • 4கே வீடியோ பதிவை ஆதரிக்கும் 32-மெகாபிக்சல் (f/2.2) செல்பீ கேமரா

  • 7,000mAh பேட்டரி

  • 100W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

  • ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஒரிஜின் ஓஎஸ் 6

  • ப்ளூடூத் 6, டூயல்-பேண்ட் வைஃபை 7, ஜிபிஎஸ்

  • அளவீட்டில் 163.65×76.80×8.10மிமீ

  • அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார்

  • எடையில் சுமார் 221 கிராம் இருக்கும்.

ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் விலை :

சீனாவில் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.52,000 க்கு அறிமுகம்(iQOO 15 Launch Date in India Price) செய்யப்பட்டு உள்ளது. இதைவிட சற்றே அதிகமான விலை நிர்ணயத்தை (ரூ.60,000 க்குள்) நாம் இந்திய சந்தையில் எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது.