People looking to buy jewelry are happy because the price of gold continues to fall source:thamizhalai,ai generated
வணிகம்

"நகை வாங்க பொற்காலம்” : ரூ. 98,000 கீழ் குறைந்த தங்கம், 13 நாட்களில் ரூ.9,360 சரிவு : பொதுமக்கள் வரவேற்பு..!

தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் நகை வாங்கும் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Kannan

People looking to buy jewelry are happy because the price of gold continues to fall

ஆபரணத் தங்கம் விலை

கடந்த சில மாதங்களாக நகைக்கடை பக்கமே செல்லத் தயங்கிக் கொண்டிருந்த நடுத்தரக் குடும்பங்களுக்கு பெரிய நிம்மதி அளிக்கும் விதமாக, 11 மாதங்களுக்குப் பிறகு ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.1 லட்சத்திற்கு கீழ் சரிந்து இருக்கிறது.

நகை வாங்குவோர் நிம்மதி

தீபாவளிக்கு முன்பாக ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை, தற்போது தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவது திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு நகை வாங்கக் காத்திருந்தவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவரனுக்கு ரூ. 2,040 சரிவு

11 மாதங்களுக்கு பிறகு நேற்று சவரன் ஒரு லட்சத்திற்கு கீழ் குறைந்த தங்கம் விலை, இன்றும் அதிரடி சரிவை சந்தித்து இருக்கிறது. அதன்படி, ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 12,215 ரூபாயாகக் குறைந்துள்ளது.

அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 97,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று தங்கம் விலை சவரனுக்கு 2,040 ரூபாய் சரிந்துள்ளது.

10 நாட்களில் தங்கத்தின் விலை நிலவரம்

நவம்பர் 18 - ரூ. 97,720

நவம்பர் 17 - ரூ. 99,760

நவம்பர் 16 - ரூ. 1,00,320

நவம்பர் 15 - ரூ. 1,00,920

நவம்பர் 14 - ரூ. 1,00,920

நவம்பர் 13 - ரூ. 1,01,560

நவம்பர் 12 - ரூ. 1,02,520

நவம்பர் 11 - ரூ. 1,04,120

நவம்பர் 10 - ரூ. 1,05,680

நவம்பர் 9 - ரூ. 1,06,040

தூய தங்கத்தின் விலை

24 காரட் தூய தங்கத்தின் விலையும் இன்று அதிரடியாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிராம் தூய தங்கம் 13,325 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, 8 கிராம் தங்கம் விலை 1,06,600 ரூபாயாக இருக்கிறது.

வெள்ளி விலை

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.185-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 13 நாட்களில் மட்டும் சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.9,360 சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

=====