சர்வதேச காரணங்களால் விலை சரிவு
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகித்தை உயர்த்த போவதாக நிலவும் எதிர்பார்ப்பு, வலிமையாகும் அமெரிக்க டாலர், அதிக வட்டி தரும் பத்திரங்களை முதலீட்டாளர்கள் வாங்குவது ஆகிய காரணங்களால், தங்கத்தின் விலை கடந்த.9ம் தேதி முதல் குறைந்து வருகிறது.
ரூ.1 லட்சத்திற்கு கீழ் சரிந்த தங்கம்
11 மாதங்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் (நவ.17) ஒரு பவுன் ரூ.1 லட்சத்துக்குக் கீழ் இறங்கியது. இதன் தொடர்ச்சியாக, சென்னையில் நேற்றும் இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது. நேற்று சவரன் விலை ரூ.2,040 வரை குறைந்தது.
இன்று சவரனுக்கு ரூ.1,850 சரிவு
இந்நிலையில், இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.235 குறைந்து ரூ.11,980 ஆகவும், ஒரு பவுன் விலை ரூ.1,880 குறைந்து ரூ.95,840 ஆகவும் விற்பனை ஆகிறது.
24 கேரட் தங்கம் விலை
அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.257 குறைந்து ரூ.13,069 ஆகவும், பவுன் விலை ரூ.2,056 குறைந்து ரூ.1,04,522 ஆகவும் விற்பனை ஆகிறது.
18 கேரட் தங்கம் விலை
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.195 குறைந்து ஒரு கிராம் ரூ.9,805க்கும், சவரனுக்கு ரூ.1,560 குறைந்து ஒரு சவரன் ரூ.78,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
10 நாட்களில் ரூ.10,000 சரிவு
கடந்த 10 நாட்களில் மட்டுமே தங்கம் விலை சவரனுக்கு ரூ. 9,840 சரிவை கண்டுள்ளது.
தங்கம் வாங்க மக்கள் ஆர்வம்
இந்த விலை குறைவுப் போக்கு காரணமாக, பொதுமக்கள் தங்கம் வாங்குவதற்கு இது சரியான நேரம். முகூர்த்த நாட்களும் இருப்பதால், மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
வெள்ளி விலையும் சரிவு
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து கிராம் ரூ.180க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
==================