price of gold has crossed the 95,000 rupee mark, the price of silver has also increased by 9,000 rupees per kilogram Google
வணிகம்

தங்கம் சவரனுக்கு 1,120 உயர்வு, 95,000ஐ தாண்டியது:உச்சத்தில் வெள்ளி

Gold Rate Today in Chennai : தங்கம் விலை சவரன் 95 ஆயிரத்தை தாண்டி இருக்கும் நிலையில், வெள்ளி விலையும் கிலோவுக்கு 9 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது.

Kannan

தங்கம் விலை - ஏற்ற இறக்கம்

Gold Rate Today in Chennai : சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலையில் ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் ஆபரண தங்கம், கிராம் 11,770 ரூபாய்க்கும், சவரன், 94,160 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 180 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 70 ரூபாய் உயர்ந்து, 11,840 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 560 ரூபாய் அதிகரித்து, 94,720 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு மூன்று ரூபாய் உயர்ந்து, 183 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

இந்நிலையில், இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1120 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.95,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராமுக்கு ரூ.140 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,980க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.95 ஆயிரத்தை தாண்டி உச்சம் தொட்டுள்ளது.

நவம்பரில் சவரனுக்கு ரூ.5,360 உயர்வு

நவம்பர் ஒன்றாம் தேதி நிலவரத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 670 ரூபாயும், சவரனுக்கு 5,360 ரூபாயும் விலை உயர்ந்திருக்கிறது.

24 கேரட் கிராம் ரூ.13,000

24 கேரட் தங்கம் கிராமுக்கு 153 ரூபாய் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது . நேற்று 12,916 ரூபாய்க்கு விற்பனையாளர் தங்கம் இன்று கிராமுக்கு 13,000 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.ஒரு சவரனுக்கு 1,824 ரூபாய் விலை உயர்ந்து, 1,04, 552 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

18 கேரட் தங்கம் விலை

சென்னையில் இன்று 18 கேரட் தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. ஒரு கிராமுக்கு 120 ரூபாய் விலை உயர்ந்து 9,995 ரூபாய்க்கும், ஒரு சவரன் 960 ரூபாய் உயர்ந்து 79,960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் புதிய உச்சம்

வெள்ளி விலையும் இன்று தடாலடியாக கிராமுக்கு 9 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையில் நேற்று 183 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி இன்று 9 ரூபாய் உயர்ந்து 192 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

2 லட்சத்தை எட்டும் வெள்ளி

ஒரு கிலோ வெள்ளி 9,000 ரூபாய் விலை உயர்ந்து 1,92,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நவம்பர் ஒன்றாம் தேதி அன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 166 ரூபாயாக இருந்தது. 29 நாட்களில் கிராமுக்கு 26 ரூபாயும் கிலோவுக்கு 26,000 ரூபாயும் உயர்ந்துள்ளது. விரைவில் வெள்ளி விலை கிராம் 200 ரூபாயும், கிலோ 2 லட்சம் ரூபாய் தொடும் எனத் தெரிகிறது.

=============