price of gold has declined for the third consecutive day, with a sovereign now being sold for 102,520 rupees
டாலர் மதிப்பு சரிவு
அமெரிக்க இடைக்கால தேர்தலில் டிரம்ப் பின்னடவை சந்தித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க டாலரில் நடைபெறும் வர்த்தகங்கள் சரிவை சந்தித்து வருகின்றன.
இதனிடையே, ஈரானுடனான போர் முடிவுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்திருக்கிறார். இதனால் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது.
கச்சா எண்ணெய் விலை சரிவு
கடந்த பிப்ரவரி இறுதியில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், பங்குச்சந்தை, தங்கம் உள்ளிட்ட அனைத்து வகையான முதலீடுகளும் அடி வாங்கின. ஆனால் தற்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் மிகப்பெரிய ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
பங்குச் சந்தை எழுச்சி, தங்கம் விலை சரிவு
பொதுவாக பங்குச்சந்தை ஏற்றத்தில் இருக்கும்போது முதலீட்டாளர்கள் அதிக லாபம் நோக்கி செல்வதால், தங்கத்தின் மீதான முதலீடு குறையும். இதனால் தங்கம் விலையும் சரியும்.
3 நாட்களில் ரூ.3,520 குறைவு
இதன் காரணமாகவே, தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. குறிப்பாக, கடந்த 3 நாட்களில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 3,520 குறைந்திருக்கிறது.
தங்கம் விலை இன்று
ஆபரண தங்கம் 22 காரட்டின் விலை இன்று ரூ.200 குறைந்து ஒரு கிராம் ரூ. 12,815-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சவரனுக்கு ரூ.1600 குறைந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,02,520-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
5 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை
ஒரு கிராம் சவரன் விலை
நவம்பர் 12 ரூ. 12,815 ரூ. 1,02,520
நவம்பர் 11 ரூ. 13,015 ரூ. 1,04,120
நவம்பர் 10 ரூ. 13,210 ரூ. 1,05,680
நவம்பர் 9 ரூ. 13,255 ரூ. 1,06,040
நவம்பர் 8 ரூ. 13,160 ரூ. 1,05,280
வெள்ளி விலை மாற்றம் இல்லை
வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 200-க்கும், கிலோவுக்கு ரூ. 5,000 குறைந்து ரூ. 2,00,000-க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதே விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.
=======================