price of gold has dropped by up to ₹5,000 per sovereign over the past two weeks, the price of silver is also plummeting sharply.
தங்கம் விலை குறைவு
தமிழ்நாட்டில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் விலை, கிராமுக்கு 25 ரூபாய் விலை குறைந்து, 13,640 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஒரு சவரன் ஆபரண தங்கம் 200 ரூபாய் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,09,210 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
21ம் தேதி முதல் இறங்குமுகம்
தங்கம் விலை கடந்த 21ஆம் தேதி முதலே இறங்குமுகத்தில் தான் இருக்கிறது. அந்தவகையில், இன்று வரை ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 645 ரூபாய் விலை குறைந்துள்ளது.
2 வாரத்தில் சவரனுக்கு ரூ.5,160 குறைவு
ஒரு சவரனுக்கு 5,160 ரூபாய் தங்கம் விலை குறைந்துள்ளது. 2 வாரங்களில் ஒரு சவரனுக்கு 5,160 ரூபாய் சரிவு என்பது மிகப்பெரிய விலை குறைவாகும்.
நேற்று இன்று என 2 நாட்களில் மட்டும் ஆபரண தங்கம் விலை விலை ஒரு கிராமுக்கு 360 ரூபாயும், சவரனுக்கு 2,880 ரூபாயும் விலை குறைந்துள்ளது.
சுப நிகழ்ச்சிகள், நகை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்போருக்கு, இந்த அதிரடி சரிவு நல்ல வாய்ப்பாக இருக்கும்.
வெள்ளியும் தொடர்ந்து சரிவு
வெள்ளியின் விலையும் இன்று மாற்றமடைந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் விலை சரிந்து 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ 5000 ரூபாய் விலை சரிந்து 2.40 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது.
2 வாரங்களில் கிலோவுக்கு ரூ.20,000 குறைந்தது
செப்டம்பர் 22ஆம் தேதியில் இருந்து வெள்ளி விலை சரிவில் தான் இருக்கிறது. இந்த 2 வாரங்களில் மட்டும் வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாயும் கிலோவுக்கு 20,000 ரூபாயும் விலை சரிந்துள்ளது.
=======