Reserve Bank Governor Sanjay Malhotra announced that there was no change in the repo rate, which 5.25% Source : RBI
வணிகம்

ரெப்போ வட்டி விகிதத்தில் ஏமாற்றம் : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

RBI Repo Rate 2026 Unchanged : வங்கிகளுக்கான குறுகிய கால கடன்கள் மீதான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் ரெப்போ விகிதம் 5.5 சதவீதமாகவே தொடரும் .

Rohini

சஞ்சய் மல்ஹோத்ரா கூறியதாவது

RBI Keeps Repo Rate Unchanged At 5.25% In First Policy Decision After Budget : ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரெப்போ வட்டி விகிதத்தை 5.5 சதவீதமாகவே தொடர முடிவு எடுத்துள்ளதாக அறிவித்தார் .

வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை

இதன் மூலம் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .

எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம் என கூறப்படுகிறது .

இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும். அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்கப்படுமா அல்லது குறைக்கப்படுமா என்று முடிவெடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும் .

அந்த வகையில் 3 நாள் நிர்வாகக் குழு கூட்டத்துக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஏற்றுமதி அதிகரிக்கும்

சஞ்சய் மல்ஹோத்ரா கூறுகையில், "சமீபத்தில் முடிவடைந்த இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், மற்றும் இறுதிக்கட்டத்தில் இருக்கும் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை ஏற்றுமதியை அதிகரிக்க இந்த வட்டி விகிதம் வழி வகுக்கும் என்றும் குறிப்பிட்டார்.

வளர்ச்சி விகிதம்

அடுத்த நிதியாண்டின் முதல் மற்றும் இரண்டாம் காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.9 சதவீதம் மற்றும் 7 சதவீதமாக இருக்க போவதாகவும் கூட்டத்தில் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கி அறிவிப்பு

உலக அளவிலான பொருளாதார சூழல், அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை, பணவீக்கம், ஜிடிபி ஆகியவற்றிற்க்கு மத்தியில் இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் ஏமாற்றம்

ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படாததால், வங்கிகளுக்கான வட்டி தொகையில் மாற்றம் இருக்காது. இதனால், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.