restrictions on gold imports have increased, jewelers are implementing alternative methods google
வணிகம்

தங்கநகை விற்பனை : வேகமெடுத்த மறுசுழற்சி வணிகம்! : மாற்று வழிகளில் கடைகள், விற்பனைக்கு வரும் 14 காரட் தங்கம்!

தங்கம் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், மாற்று வழிகளை நகைக்கடைகள் செயல்படுத்தி வருகின்றன.

Kannan

தங்கம் வாங்குவதை தவிர்க்க...

மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையை சமாளிக்க தங்க நகைகள் வாங்குவதை ஓராண்டிற்கு தற்காலிகமாக தள்ளி வைக்க பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இறக்குமதி வரி அதிகரிப்பு

வெளிநாடுகளில் இருந்து தங்கம் வாங்குவதை குறைக்கும் நோக்கில் அதன் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15% ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால் ஏற்கனெவே உச்சாணிக்கு சென்றுள்ள தங்கம் விலை மேலும் உயரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

நகைக்கடைகளுக்கு பாதிப்பு

ஒருபக்கம் விலையேற்றம், மறுபக்கம் இறக்குமதி வரி உயர்வு என தங்க விவகாரத்தில், நகைக்கடைகள் கடுமையா பாதிக்கப்படும் நிலை உருவாகி இருக்கு.

மறுசுழற்சி தங்கம்

இதை சமாளிக்க நாட்டில் உள்ள தங்கத்தையே மறு சுழற்சி முறையில் பயன்படுத்தும் உத்தியை நகைக்கடைகள் தீவிரமாக செயல்படுத்த தொடங்கியுள்ளன.

பழைய நகைகளுக்கு பதிலா புதிய நகைகள்

இதன் ஒரு பகுதியாக வீடுகளில் உள்ள தங்க நகைகளை வாங்கிக்கொண்டு புதிய நகைகளை விற்கும் போக்கு கடந்த சில நாட்களாக நாடெங்கும் வேகம் எடுத்து இருக்கிறது. முன்னணி நகைக்கடைகள் தங்க நகை பரிமாற்ற திட்டங்களை கவர்ச்சிகரமான சலுகைகளை செயல்படுத்தி வருகின்றன.

நகைகளை வாங்க பிரத்யேக கவுண்டர்

ஒருசில நிறுவனங்கள் தங்கள் கடைகளில் தங்க நகைகளை வாங்கிக்கொண்டு அதற்கு பதில் பணமாக தருவதற்கென பிரத்யேக கவுன்ட்டர்களை திறந்துள்ளன. 22 காரட் நகைகளுக்கு பதிலாக 18 காரட் நகைகளை விற்பதற்கும் கடைகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

14 காரட் தங்கம்

இதற்கு ஒருபடி மேலே போய், சில நிறுவனங்கள் 14 காரட் நகைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. 14 காரட் தங்கம் என்பது 58.3% தூய தங்கமும், 41.7% செம்பு, வெள்ளி அல்லது துத்தநாகம் போன்ற பிற உலோகங்களும் கலந்த கலவையாகும். இது மிகவும் உறுதியானது மற்றும் தினசரி உபயோகத்திற்கு உகந்தது.

தங்க நாணய விற்பனை நிறுத்தம்

தங்க நாணயம் விற்பனையை நிறுத்தியுள்ளதுடன் நகை சேமிப்பு திட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி விட்டன. இந்தியாவில் வீடுகளில் பல ஆயிரம் டன் தங்கம் உள்ளதாகவும் அவற்றை சந்தைகளுக்கு கொண்டு வந்தாலே தங்கம் இறக்குமதியை வெகுவாக குறைக்கலாம் என நகை வணிகர்கள் கூட்டமைப்பு கூறியுள்ளது.

அரசுக்கு யோசனை

குறைந்த காரட் நகைகளை விற்பது மூலம் தங்கம் இறக்குமதியை 20 முதல் 30% வரை குறைக்க முடியும் என அகில இந்திய நகை வணிகர்கள் கூட்டமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.

பொதுமக்களை பொருத்தவரை 24 காரட்டில் முதலீடு செய்து நகைகளை பயன்படுத்துவதை விட, 14 காரட்டில் வாங்கி அதை பயன்படுத்துவதே சிக்கமான இருக்கும் வழியாகும்.

==================

====