கடும் வீழ்ச்சியயை சந்தித்த எண்ணெய் இறக்குமதி
India Import Crude Oil from Russia : அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இந்தியா தனது ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை குறைந்திருந்தது .
வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, ஜனவரி 2026-இல் ரஷ்யாவிலிருந்து 1.98 பில்லியன் டாலர் மதிப்புள்ள கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் வீழ்ச்சியயை சந்தித்துள்ளதை காட்டுகிறது.
எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு
இந்திய எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு ஜனவரி 2026-இல் 19.3% ஆகக் குறைந்திறந்த நிலையில் இது, டிசம்பர் 2022-க்குப் பிறகு மிகக் குறைவானது ஆகும். \
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு 27.5% ஆகவும், மே 2025-இல் 33% ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வளைகுடா நாடுகளில் எண்ணெய் இறக்குமதி
ஜனவரி 2026-இல் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் சுமார் 16.6% ஈராக்கிலிருந்தும் ,சவுதி அரேபியாவில் இருந்து 17.5% சதவீதமாகவும் ஏப்ரல் 2023-க்குப் பிறகு மிக உயர்வானது ஆகும்.
இதேபோல், குவைத்தின் இறக்குமதி பங்கு 6.1% ஆக உயர்ந்துள்ளது .இது, பிப்ரவரி 2023-க்குப் பிறகு மிக உயர்வானது ஆகும்.
மேலும் படிக்க : இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படுமா? : மத்திய அரசு விளக்கம்
ஆபத்தில் இருக்கும் எண்ணெய் இறக்குமதி
மோதலை தொடர்ந்து முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படும் வேளையில் அது இந்தியா மற்றும் உலக எண்ணெய் சந்தைகளில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த வழித்தடம் வழியாக இந்தியா தினமும் சுமார் 2.6 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயைப் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இது மூடப்படுவதால் கச்சா எண்ணெயின் விலை அதிகமாக உயர வாய்ப்பு இருபதாக நிபுணர்களை தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த எண்ணெய் முதன்மையாக ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத்திலிருந்து வருகிறது
பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படாது - மத்திய அரசு
இந்த இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான போரால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விநியோகத்தில் தற்போதைக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும் படிக்க : Strait of Hormuz | உலக பொருளாதாரத்தை அசைக்கும் ஹார்முஸ் நீரிணை : ஈரான் முடிவால் இந்தியா, சீனா பாதிப்பு!