Gold and Silver Prices Increased in chennai:
Today Gold and Silver Rate Update in Chennai : சென்னையில் இன்று ஆபரண தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்றைய தங்கம் விலை
சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,430க்கும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,07,440க்கும் விற்பனையானது.
ஏற்ற இறக்கத்தில் தங்கம், வெள்ளி
தினமும் காலையில் தங்கத்தின் விலை ஏறுவதும் மாலையில் குறைவதும் என இருந்ததால் வார கடைசி நாளான இன்று தங்கம் விலை குறையும் என எதிர்ப்பார்த்த நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி தான் மிஞ்சியது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று மீண்டும் தங்கம் மற்றும் வெள்ளி அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,660க்கும், சவரனுக்கு ரூ.1840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
தங்கத்தைப் போலவே வெள்ளியும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.250-க்கும், கிலோ ரூ.5000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நகைப்பிரியர்கள் ஏமாற்றம்
தங்கம் மற்றும் வெள்ளியின் இந்த திடீர் விலை ஏற்றம், நகை வாங்கத் திட்டமிட்டுள்ள இல்லத்தரசிகள் மற்றும் முதலீட்டாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த ஏழு நாட்களில் தங்கம் விலை கடந்து வந்த பாதை:
21 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,08,960
22 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,08,960
23 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,06,720
24 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,06,000
25 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,08,800
26 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,06,800
27 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,07,440
28 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,09,280 (இன்று)
=====