SUV Car Sales January 2026 : Tata Nexon and Tata Punch, Maruti Breeza 560 Were Most Popular Choices Among Private Buyers  Source : SUV Car
வணிகம்

விற்பனையில் மாஸ் காட்டும் மாருதி எஸ்யூவி கார் : காரணம் தெரியுமா?

31 நாட்களில் 17,486 யூனிட்கள் விற்பனையான இந்த கார், தினசரி சராசரியாக 560க்கும் மேற்பட்ட விற்பனையை பதிவு செய்துள்ளது. போட்டி விலை, சிறந்த மைலேஜ், அம்சங்களால் இந்த வெற்றி சாத்தியம் என் கூறப்படுகிறது .

Rohini

அதிகமான விற்பனை

Maruti Suzuki, SUV Car Sales January 2026 : 2026 ஆம் ஆண்டை மாருதி சுசூகி விற்பனை ரீதியாக மிக வலுவாக விற்பனையானது என்றுதான் கூற வேண்டும். ஜனவரி மாதத்தில் மட்டும் 2.37 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டது . இந்தியர்கள் கார் சந்தையில் தனது ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளனர் என்றுதான் கூற வேண்டும்.

விற்பனைக்கான காரணம்

ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, பிரெஸ்ஸா போன்ற பிரபல மாடல்களின் நிலையான கேள்வி இந்த சாதனைக்கு காரணமாக அமைந்துள்ளது. குறைந்த விலை, நல்ல மைலேஜ், நம்பகமான செயல்திறன் ஆகியவை இந்த கார்களை தேர்ந்தெடுப்பதற்கான முதல் தேர்வாக மாற்றியுள்ளன.

மாருதி பிரெஸ்ஸா மாடல்

இந்த பட்டியலில் குறிப்பாக கவனம் ஈர்த்தது மாருதி சுசூகி பிரெஸ்ஸா எஸ்யூவி. கடும் போட்டி நிலவும் சப்-காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில், பல புதிய மாடல்கள் புழக்கத்தில் இருந்தாலும் ,பிரெஸ்ஸா தனது இடத்தை இழக்காமல் முன்னணியில் நீடித்து வருகிறது.

ஜனவரியில் 17,486 கார்கள் விற்பனை

2026 ஜனவரியில் மட்டும் இந்த எஸ்யூவி 17,486 யூனிட்கள் பயனர்களிடையயே விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரெஸ்ஸா நம்பிக்கைக்குரிய பெயர்

ஒரு நாளுக்கு சராசரியாக 560க்கும் மேற்பட்ட பிரெஸ்ஸா கார்கள் வாடிக்கையாளர்களிடம் சென்று சேர்ந்துள்ளன . இது எந்த ஒரு மாடலுக்கும் எளிதான சாதனை அல்ல.

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் காம்பாக்ட் எஸ்யூவி சந்தையில், பிரெஸ்ஸா பல ஆண்டுகளாக நம்பிக்கைக்குரிய பெயராக இருந்து வருவதே இதற்கு முக்கிய காரணம் .

பிரெஸ்ஸா விலை

​​பிரெஸ்ஸா விலையினை பொறுத்த வரையில் ரூ.8.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் ரூ.13.01 லட்சம் வரை கிடைக்கும். இந்த விலையில் 5 பேர் வசதியாக பயணம் செய்யும் இடவசதி,

குடும்பம் மற்றும் தினசரி பயணத்திற்கு ஏற்ற வடிவமைப்பு ஆகியவை இதன் பெரிய பலமாக இருப்பதே இதன் சிறப்பம்சமாக உள்ளது .

மைலேஜ் எவ்வளவு

எஞ்சின் வசதிகளை பார்க்கையில், K15 பெட்ரோல் மற்றும் CNG வகைகள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் மாடல் மென்மையான ஓட்டத்தை வழங்கும் போது, ​​CNG மாடல் அதிக மைலேஜ் விரும்புவோருக்கு ஏற்றதாக மாறும் வகையில் உள்ளது .

பெட்ரோலில் 17.38 கிமீ/லி, சிஎன்ஜி-யில் 25.51 கிமீ/கிலோ மைலேஜ், 4-ஸ்டார் குளோபல் என்சிஏபி பாதுகாப்பு மதிப்பீடு, 9-இஞ்ச் இன்ஃபோடெயின்மென்ட், 360° கேமரா, சன் ரூஃப் போன்ற வசதிகள் என இவை அனைத்தும் சேர்ந்து பிரெஸ்ஸாவை பணத்திற்கான வலுவான எஸ்யூவியாக மாற்றுகிறது என்பதே குறிப்பிடத்தக்கது.

=============