Tamil Nadu Congress Leader: Who is Manickam Tagore? What is his political background? full details.  google
வணிகம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் : யார் இந்த மாணிக்கம் தாகூர்? : அரசியில் பின்னணி என்ன, முழு விவரம் ..

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

Rohini

தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர்

தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவராக புதிதாக மாணிக்கம் தாகூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . முன்னாள் மாநில தலைவராக இருந்த செல்வபெருந்தகை பதவி விலகும் நிலையில் தமிழ்நாட்டின் மாநில தலைவராக மாணிக்கம் தாகூர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்

மாநில காங்கிரஸ் உறுப்பினராக அரசியல் பயணம் தொடக்கம்

புதிதாக பொறுப்பேற்றுள்ள மாணிக்கம் தாகூர் ,1994ஆம் ஆண்டு மாணவர் காங்கிரஸ் உறுப்பினராக அரசியல் பயணத்தை தொடங்கினார்.

தொடர்ந்து 1995இல் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸின் மாவட்ட பொதுச் செயலராகவும், 1996ஆம் ஆண்டு அதே அமைப்பின் தேசிய பொதுச் செயலராகவும் பணியாற்றியுள்ளார். 1997ஆம் ஆண்டு அகில இந்திய மாணவர் காங்கிரஸின் தேசிய பொதுச் செயலராகவும், 1998இல் அந்த அமைப்பின் தலைவராகவும் இருந்துள்ளார் மாணிக்கம் தாகூர்

2009ஆம் ஆண்டு விருதுநகர் மக்களவை தொகுதி உறுப்பினராக

2002 முதல் 2005 வரை இளைஞர் காங்கிரஸின் தேசிய பொதுச் செயலராகவும், 2006இல் காங்கிரஸ் மத்திய தேர்தல் பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளார்.

2008ஆம் ஆண்டு இளைஞர் காங்கிரஸின் தேர்தல் ஆணையராக பணியாற்றியுள்ளார். 2009ஆம் ஆண்டு விருதுநகர் மக்களவை தொகுதியின் உறுப்பினராக முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

தேர்த்ல் குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர்

மாணிக்கம் தாகூர் , தமிழகம் மட்டுமல்லாது ,2014இல் மேற்கு வங்கம், பிஹார், அஸாம் மாநிலங்களின் மக்களவை தேர்தல் காங்கிரஸ் தேர்வுக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு அதன் செயல்பாடுகளை கவனித்து கொண்டார் .

2017 முதல் 2020 வரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலர் மற்றும் கர்நாடக மாநில பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

காங்கிரஸ் கொறடாவாக மாணிக்கம் தாகூர்

2019ஆம் ஆண்டு விருதுநகர் மக்களவை தொகுதி உறுப்பினராக நின்று இரண்டாவது முறையாக அந்த தொகுதியில் வெற்றி கண்டார் .

மேலும், மக்களவையின் காங்கிரஸ் கொறடாவாகவும் பணியாற்றினார். 2020 முதல் 2023 வரை தெலங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக பணியாற்றியுள்ளார். 2024ஆம் ஆண்டு விருதுநகர் மக்களவை தொகுதியின் உறுப்பினராக 3ஆவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமனம்

தற்போது தமிழ்நாட்டின் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் , இவ்வாறாக இத்தனை ஆண்டுகாலமாக காங்கிரஸில் பல்வேறு பொறுப்புகளில் தன்னை ஈடுபடுத்திகொண்டார் மாணிக்கம் தாகூர்.

=============================