the price of gold dropping by Rs. 8,360 per sovereign in the month of October alone source:thamizhalai,ai generated
வணிகம்

அக்டோபர் : சவரனுக்கு ரூ.8,360 குறைந்த தங்கம் : 75,000 வரை வீழ்ச்சி அடையுமா? அமெரிக்கா கையில் முடிவு, நிபுணர்கள் கணிப்பு!

அக்டோபர் மாதம் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8,360 குறைந்த நிலையில், இனியும் சரிவு நீடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Kannan

அக்டோபரில் சரிந்த விலை

கடந்த மாதம் பெரும்பாலான நாட்களில் தங்கம் விலை குறைந்து நகைப் பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதன்படி ஒரே மாதத்தில் சவரனுக்கு ரூ. 8,360 குறைந்திருக்கிறது.

தங்கம் விலை வரும் நாட்களிலும் குறைய அதிக வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கூறும் நிலையில், இந்தியாவில் ஒரு சவரன் விலை ரூ. 75 ஆயிரம் வரை குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெடரல் வங்கி வட்டி விகிதம் உயர்வு

குறிப்பாக, கடந்த முறை அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதிலிருந்தே தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. மீண்டும் வட்டி விகிதம் குறைக்கப்படும் பட்சத்தில் அது தங்கம் விலையின் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி விகிதம் உயரும்போது டாலரில் முதலீடு செய்பவர்கள் தங்கள் வசமுள்ள தங்கத்தை விற்றுவிட்டு, அதனை டாலரில் நடைபெறுகிற வர்த்தகத்தின் மீது முதலீடு செய்வார்கள். இதனால் குறுகிய காலத்தில் அதிக லாபம் அடைய முடியும்.

டிசம்பரில் குறைய வாய்ப்பு

வட்டி விகிதம் உயர்த்தப்படாததால் தங்கம் விலை இனிமேல் குறைய வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை என்கின்றனர் நிபுணர்கள். டிசம்பரில் நடைபெறுகிற கூட்டத்தில் வட்டி விகிதத்தை அமெரிக்கா உயர்த்தினால் தங்கம் விலை குறையலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

தங்கம் விலை

ஆபரண தங்கத்தின் விலை சனிக்கிழமை (அக்.31) கிராமுக்கு ரூ. 310 குறைந்து ஒரு கிராம் ரூ. 12,730-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ. 45 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 12,775-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ. 12,775

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ. 1,02,200

வெள்ளி ஒரு கிராம் - ரூ. 200

வெள்ளி ஒரு கிலோ - ரூ. 2,00,000

கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை

நவம்பர் 2 ரூ. 12,775 ரூ. 1,02,200

நவம்பர் 1 ரூ. 12,730 ரூ. 1,01,840

அக்டோபர் 31 ரூ. 12,730 ரூ. 1,01,840

அக்டோபர் 30 ரூ. 13,040 ரூ. 1,04,320

அக்டோபர் 29 ரூ. 13,195 ரூ. 1,05,560

வெள்ளி விலை

சனிக்கிழமை ஒரு கிராம் ரூ. 200, கிலோ ரூ. 2,00,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

===================