The public is shocked as the price of gold continues to rise AI generated
வணிகம்

”தொடர் உயர்வில் தங்கம்” : 15,000ஐ நெருங்கும் கிராம், 1,20,000ஐ எட்டும் 10 கிராம் : 21 நாட்களில் 17,000 அதிகரிப்பு..!

தங்கம் விலையானது தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால், பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Kannan

தங்கம் விலை நிர்ணயம்

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலையானது நிர்ணயிக்கப்படுகிறது.

இந்தியாவின் தங்கம் இறக்குமதி

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அது சர்வதேச அளவில் தங்க விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

சுங்கவரி அதிகரிப்பு

மே மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

நேற்று ஒரே நாளில் ரூ. 2,000 அதிகரிப்பு

இந்நிலையில், தங்கம் விலை கடந்த 15ம் தேதி முதல் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை இரண்டு முறை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று காலை கிராமுக்கு ரூ.110, மாலை கிராமுக்கு ரூ.140 என்றும் தங்கம் விலை அதிகரித்தது.

இன்றைய விலை

இந்தச் சூழலில் சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,950-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,19,600-க்கு விற்பனையாகிறது.

24 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.16,309-க்கு விற்பனையாகிறது.

18 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.12,730-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.270-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனையாகிறது.

21 நாட்களில் சவரனுக்கு 17,000 அதிகரிப்பு

ஆகஸ்ட் 1ம் தேதி ஆபரண தங்கம் ஒரு கிராம்13,256 ரூபாய்க்கு தான் விற்கப்பட்டது. ஆனால் இன்று 14,950 ரூபாயை தொட்டுவிட்டது.

அந்த வகையில் இந்த மாதத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு 1,694 ரூபாயும் சவரனுக்கு 13,552 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. 10 கிராமுக்கு 16,940 ரூபாய் விலை கூடியுள்ளது.

வெள்ளியும் கிலோவுக்கு 35,000 உயர்வு

ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 235 ரூபாயாக தான் இருந்தது. ஆனால் படிப்படியாக விலை உயர்ந்து கிராம் 270 ரூபாய் வரை வந்துவிட்டது.

வெள்ளி விலை கிராமுக்கு 35 ரூபாயும் கிலோவுக்கு 35,000 ரூபாயும் விலை கூடியுள்ளது.

================