The World Gold Council has stated that the demand for gold in India has fallen by 6% AI generated
வணிகம்

இந்தியாவில் தங்கத்தின் தேவை சரிவு : 6% குறைந்தது, நகைகளுக்கான தேவையும் 15% குறைவு, : உலக தங்க கவுன்சில்..!

இந்தியாவில் தங்கத்தின் தேவை என்பது 6% வரை சரிந்து இருப்பதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

Kannan

இந்தியாவின் தங்கம் இறக்குமதி

இந்தியா தனக்கு தேவைப்படும் தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. காரணம் நமது நாட்டுல தங்கம் கிடைப்பது குறைவாகவே இருக்கிறது.

இந்தியர்களின் தங்க மோகம்

அதுமட்டுமின்றி உலக அளவில் தங்கத்தை அதிகம் வாங்குவது இந்தியர்கள் தான். நகையாகவும், முதலீடாகவும் தங்கத்தை பயன்படுத்துறாங்க.

எனவே, விலை எவ்வளவு அதிகமானாலும், தங்கம் வாங்குற ஆசை மட்டும் குறையறதே இல்லை. தற்போது தங்கம் விலை சவரனுக்கு ஒரு லட்சத்தை தாண்டி விற்பனை ஆனாலும், நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதிக் கொண்டு தான் இருக்கிறது.

தங்கத்தின் தேவை சரிவு

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 131.4 டன்னாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 6% சரிவு ஆகும்.

விலை அதிகரிப்பு, பருவகால மாற்றங்கள் இதற்கு முக்கியக் காரணமாகும். தேவையின் அளவு மற்றும் மதிப்புஅளவு அடிப்படையில் மொத்த தேவை 6% குறைந்து 131.4 டன்னாக உள்ளது.

விலையால் மதிப்பு அதிகரிப்பு

அதேசமயம் விலையின் மதிப்பு அடிப்படையில் 50% அதிகரித்து ரூ.1,98,100 கோடியாக உயர்ந்துள்ளது.முழு ஆண்டுக்கான ஒட்டுமொத்த தேவை 650 முதல் 750 டன்னாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தங்கக் கடன்கள் மீது ஆர்வம்

வங்கிகளின் தங்கக் கடன்கள் மே மாத இறுதியில் ரூ.5,10,000 கோடியாக இரு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் நகைகளை விற்காமல் தங்கக் கடன்களை பெற ஆர்வம் காட்டுகின்றனர்

இந்தச் சூழலில, நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் தங்​கத்​துக்கான தேவை 6% குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த காலகட்டத்துல, 139.7 டன்​களாக இருந்த உள்​நாட்டு தங்​கத்​தின் தேவை தற்​போது 131.4 டன்​களாக குறைந்து இருக்கிறது.

விற்பனை மதிப்பு அதிகரிப்பு

தங்க நகைகளுக்கான தேவை 15 சதவீதம் குறைந்து இருந்தாலும், விலையேற்றம் காரணமாக, விற்பனை மதிப்பு 35 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. மத்திய அரசு சுங்க வரியை உயர்த்தியதும், இறக்குமதி குறைய காரணமாக கூறப்படுகிறது.

விலை அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் குறைந்த எடை கொண்ட நகைகள், குறைந்த காரட் நகைகளை வாங்கவே ஆர்வம் காட்டுவதாகவும் உலக தங்க கவுன்சில் தெரிவித்து இருக்கிறது.

தங்க முதலீடு அதிகரிப்பு

மறுபக்கம் முதலீட்டு தேவை அடிப்படையில் வாங்கப்படும் தங்க கட்டிகள், நாணயங்களின் விற்பனை அதிகரித்து இருக்கிறது. 50 டன் அளவிற்கு இவற்றின் விற்பனை உயர்ந்துள்ளது.

கோல்ட் இடிஎப் முதலீடும் 49 சதவீதம் வரை அதிகரித்து இருப்பது, மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதில் காட்டும் ஆர்வத்தை வெளிப்படுத்தி உள்ளது.

======