விலைக்கான நிர்ணயம்
Today Gold and Silver Price Decreased in Chennai:
சர்வதேச பொருளாதாரச் சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா யின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று உச்சத்தை எட்டியுள்ளது .
நகைப்பிரியர்களின் எதிர்பார்ப்பு
கடந்த ஜன.30, 31 தேதிகளிலும், பிப் 2-ம் தேதியும் தங்கம் விலை ஏறிய வேகத்தில் இறங்கி வாடிக்கையாளர்களை மன ஆறுதலை அளித்திருந்த நிலையில் பிப் 7 அன்று விலை அதிகரித்திருந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளே உச்சத்தை எட்டியிருக்கிறது .
இன்றைய தங்கம் விலை
பிப் 7 அதிகரித்திருந்த தங்கத்தின் விலை இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,840 உயர்ந்துள்ளது.பவுனுக்கு ரூ.1,840 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,17,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது .
வெள்ளி விலை உயர்வு
தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.பிப் 7 அதிகரித்திருந்த நிலையில் இன்றும் உச்சத்தை எட்டியிருக்கிறது.
கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ரூ.300-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.15,000 உயர்ந்து, ரூ.3,00,000-க்கும் சந்தையில் விற்பனை ஆகிறது. பிளாட்டினம் விலை கிராமுக்கு ரூ.20 என விலை குறைந்து ஒரு கிராம் ரூ.6,091-க்கு விற்பனை செய்யப்படுகிறது .
நேற்று முன்தினம் தங்கம் மற்றும் வெள்ளயின் நிலவரம்
நேற்று முன்தினம் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.14,420-க்கும், சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,15,360-க்கு விற்பனை செய்யப்பட்டது .
வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.285-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது .