Today Gold Price: Gold hits peak on first day of the week: Rs. 1440 increase per sovereign! source:google
வணிகம்

Today Gold Price : வாரத்தின் முதல் நாளிலேயே உச்சம் தொட்ட தங்கம்: சவரனுக்கு ரூ. 1440 அதிகரிப்பு!

Today Gold Price in Chennai :இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 14,860 ரூபாய்க்​கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,18,880 க்கும் விற்பனையாகிறது.

S Kavitha

தங்கம் விலைக்கான நிர்ணயம்:

Today Gold and Silver Price Increased in Chennai: சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப நாள்தோறும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.

வார தொடக்கத்திலேயே ஏற்றம் கண்ட தங்கம் விலை

வாரத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலை சவரனுக்கு ரூ.1440 உயர்ந்து இருக்கிறது. வெள்ளி விலையும் கிலோவுக்கு 10,000 ரூபாய் அதிகரித்து இருக்கிறது.

கடந்த சில வாரங்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்றம் கண்டிருக்கிறது. அதேபோல் வாரத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1440 ரூபாய் உயர்ந்துள்ளது.

கடந்த வார இறுதியில்

கடந்த 10 ஆம் தேதி வரை தங்கம் விலை ஏற்றத்திலேயே இருந்த நிலையில் அதற்குப் பிறகான நாட்களில் சற்று விலை குறையத் தொடங்கி மீண்டும் கடந்த வாரம் இறுதியில் 2080 ரூபாய் உயர்ந்தது.

இன்றைய தங்கம் விலை

தற்போது வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சவரனுக்கு 1440 விலை அதிகரித்து , ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 14,860 ரூபாய்க்​கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,18,880 க்கும் விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி விலை

தங்கத்தைப் போன்றே வெள்ளி விலையும் ஏற்றம் கண்டிருக்கிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ 3,00,000 ரூபாய்க்​கு விற்பனை ஆகிறது.

கடந்த ஏழு நாட்களில் தங்கம் விலை கடந்து வந்த பாதை:

16 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,15,520

17 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,14,560

18 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,13,840

19 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,16,000

20 -ஆம் தேதி 1 சவரன் - ரூ. 1,15,360

21 -ஆம் தேதி 1 சவரன் - ரூ. 1,17,440

23 -ஆம் தேதி 1 சவரன் - ரூ. 1,18,880 (இன்று)